ஷவ்வால் தலைப்பிறை பார்த்தல் தொடர்பாக
அகில இலங்கை ஜம்இய்யத்துல்
உலமாவின் வேண்டுகோள்
கொழும்பு பெரிய பள்ளிவாசல்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல்
உலமா மற்றும் முஸ்லிம் கலாசார
பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவை
பிரதி மாதமும் கொழும்பு பெரிய
பள்ளிவாசலில் ஒன்றுகூடி தலைப்பிறையைத்
தீர்மானித்து வருகின்றன. அவ்வகையில்
எதிர்வரும் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறையைத்
தீர்மானிப்பதற்காக ரமழான் 29 ஆம்
நாள் (2015.07.17
ஆம்
திகதி) வெள்ளிக்கிழமை மாலை (சனி
இரவு) மேற்படி அமைப்புக்கள்
கொழும்பு பெரிய பள்ளிவாசலில்
ஒன்றுகூடவுள்ளன.
ஜம்இய்யாவின் மாவட்ட, பிரதேசக்
கிளைகள் தங்களது கிளைகளுக்குட்பட்ட
பள்ளிவாசல்களில் அன்றைய நாள்
பிறை பார்க்கும் படி அறிவிப்பு
செய்து மக்களை பிறைபார்க்கத்
தூண்டும் படியும் பிறை கண்டதாக
வரும் சாட்சியங்களைச் சரியாக விசாரித்து
உறுதிப்படுத்தி எழுத்து மூலம்
மேற்குறித்த சபைக்கு அறியத்தருமாறும்
அகில இலங்கை ஜம்இய்யத்துல்
உலமாவின் பிறைக்குழு அனைத்து கிளைகளையும்
கேட்டுக் கொள்கிறது. மேலும்
தங்களது பகுதியிலுள்ள உப பிறைக்குழுக்கள்
ஊடாக இவ்விடயங்களை செயல்படுத்த
ஆவண
செய்யும்படியும் வேண்டிக் கொள்கிறது.
குறிப்பு:
தொலைபேசி: கொழும்பு
பெரிய பள்ளிவாசல் – 011-5234044, 011-2432110, 011-2434651
அகில இலங்கை ஜம்இய்யத்துல்
உலமா – 071
4817380
தொலைநகல்: கொழும்பு
பெரிய பள்ளிவாசல் – 011-2390783
அஷ்-ஷைக்
ஏ.எம்.ஏ.
அஸீஸ்
பிறைக்குழுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல்
உலமா
0 comments:
Post a Comment