முஸ்லிம் காங்கிரஸ் புத்திஜீவிகளை
தன்னுடன் இணைத்துக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை

-    மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்திஜீவிகளை தன்னுடன் இணைத்துக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அமைச்சர் றிசாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதிகமான புத்திஜீவிகளை தன்னகத்தே இணைத்து வருகின்றது. இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், தேசியப்பட்டியல் வேட்பாளருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இக்கட்சியை ஆரம்பித்ததன் நோக்கம், முஸ்லிம் காங்கிரஸின் புதிய தலமையினால் புறம்தள்ளப்பட்டு ஒருசிலரின் அபிலாசைகளை நிவர்த்திக்கும் கட்சியாகி கீழ்மட்டத்துக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
சாய்ந்தமருதில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின்போதே .எம். ஜெமீல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான சிராஸ் மிராசாஹிப் உட்பட பெரும் எண்ணிக்கையானவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய தேசிய அமைப்பாளர் ஜெமீல் மேலும் தெரிவித்ததாவது,
மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் சமூகம் சார்ந்த பல்வேறு உத்தரவாதங்களை அந்தந்த சந்தர்ப்பங்களில் இருந்த தலைவர்களிடம் பெற்று அதனூடாக பாரியlயளவில் பங்காற்றினார்கள். தற்போதைய தலைமை உருப்படியான எதனையும் செய்யவில்லை, பெட்டிகள் மீது கொள்ளும் ஐக்கியத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தலைமை சமூக நலனில் கொள்வதில்லை..
மறைந்த தலைவர், அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்தி தனது வேலைத்திட்டங்களையும் உயர் நியமனங்களையும் வழங்கினார். தற்போதைய தலைமை கண்டியை மையப்படுத்தியும் தனது குடும்பத்தை மையப்படுத்தியுமே தனது நகர்வுகளை மேற்கொள்கின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட தன்னை தலைமை சரியான முறையில் பயன்படுத்தவில்லை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமை சமூக நலனையே பிரதானமாக கொண்டு செயற்படுகின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் இறுக்கமான ஒப்பந்தம் செய்துள்ளதன் காரணமாக இம்முறை இடம்பெறும் பாராளுமன்ற தேர்தலில் கூட வேட்பாளர் ஒதுக்கீட்டு விடயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது இலக்கை அடைந்துள்ளது.
சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையை, பெரும்பான்மையாக வாக்களித்த இம்மக்களுக்கு கட்சி செய்து கொடுக்க காத்திரமான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமை சாய்ந்தமருதுக்கு பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்கி இவ்வூரின் தேவைகளை அந்த பாராளுமன்ற உறுப்பினர் ஊடாகவே நிச்சயமாக செய்தே தீரும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்திஜீவிகளை தன்னுடன் இணைத்துக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அமைச்சர் றிசாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதிகமான புத்திஜீவிகளை தன்னகத்தே இணைத்து வருகின்றது. அதன் ஒரு அங்கமாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்..காதர் அவர்களையும் இணைக்க முயற்சிக்கப்படுகின்றது. முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயிலை இணைத்து அவரும் இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றார். கல்வியாளர்களும் துறை சார்ந்தவர்களும் நாளுக்கு நாள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு ஜெமீல் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட  வேட்பாளருமான சிராஸ் மிராசாஹிப் பேசுகையில்;

அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கீழ் போட்டியிடுவதையிட்டு தான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். தன்னுடைய வெற்றிப்பயனத்தில் எல்லோரும் இணைந்து கொள்ள வேண்டும், கல்முனை மாநகர சபையை மையப்படுத்தி இன பிரதேச வேறுபாடின்றி தான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதை மக்களுக்கு நன்கு தெரியும். தனது மக்கள் சேவையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மழுங்கடித்து விட்டது, மக்களுக்காக செயற்பட தனக்கு மக்கள் அங்கீகாரம் வழங்க வேண்டும் . இவ்வாறு சிராஸ் மிராசாஹிப் தெரிவித்தார்.



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top