ஓர் ஏழைத்தாயின் உழறல்
மனே...வாப்பா...தங்கம்
அதாஉல்லாஹ்...
வயிற்றுல சுமந்து பெற்றெடுத்து
சீராட்டி
அழகு பார்த்து சேவை செய்த வயசு
போய்...
கிழவியாய் மூலையில கிடக்கண்டா
மன...
என்னை என் பிள்ளைகள் புறம்
தள்ளியதை நான் மன்னிப்பண்டா
நீ பெற்றெடுத்த அக்கரைப்பற்று
புறக்கணிச்சா மறுமைக்கும் கடன்ரா...
இந்த கிழவிர சாபமும் வரும்...
உலகத்துர பார்வையை திரும்ப வைத்த உனக்கா மகன் வாக்களிக்காமல் போகுமா இம் மண்...
மனம் வருமா...
நீ ஊர்வலம் போற... அழகை நான்
வேற யாருக்கு ஒப்பிர்ர...
என்ற பிள்ளைகளைப் போல நீ
சுயநலவாதி இல்லையே கிளி...
கரி நாக்கால சொல்றன்டா
நீ வெல்லத்தான் போறாய் நானொரு
பேக்கு
வெத்திலை மெல்லத்தான் போறன்...
கண் பார்வை குறையத்தான் கிழவிக்கு
வாக்கோலையில உன் பெயர் மட்டும்
பளிச்சென்று தெரியும் நீ கவலப்படாதே... உன் சைவையில
நலன்ச கிழவி நான்...
உன் வெற்றிச்சத்தம் இந்த கிழவிர
காதுக்கு வரும்ரா மன...
இன்ஸா அல்லாஹ்
ஆசையோடு ஆவலாயிருக்கும்
ஆசியம்மா
குடியிருப்பு...
0 comments:
Post a Comment