பொதுத் தேர்தலைக் கண்காணிப்பதற்கு
ஐரோப்பிய ஒன்றியம் முடிவு
அடுத்த
மாதம் நடைபெறவுள்ள
நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியம்
முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த
அமைப்பு வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அடுத்த
மாதம் 17-ஆம்
திகதி நாடாளுமன்றத்
தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலை
நேரில் பார்வையிடுமாறு
எங்களுக்கு இலங்கை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து, அந்தத்
தேர்தலைப் பார்வையிடுவதற்காக
குழு ஒன்றை
அமைத்து வருகிறோம்
என்று அந்த
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வருகை தரவுள்ள
பார்வையாளர் குழுவுக்கு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்
கிறிஸ்டியன்
பிரேடா
தலைமை வகிப்பார்
என்று ஒன்றிய
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து
வெளிவிவகாரங்களுக்கான ஐரோப்பிய ஒன்றியப்
பிரதிநிதி ஃபெடரிகா
மோகேரினி கூறியிருப்பதாவது:
இலங்கையில்
நடைபெறும் தேர்தலைப்
பார்வையிடுமாறு ஏற்கெனவே பலமுறை அந்த நாட்டு
அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அந்த
அழைப்புகளைப் போலவே, தற்போதைய அவர்களது அழைப்பையும்
ஏற்று அந்த
நாட்டில் வெளிப்படையான
தேர்தல் நடத்துவதை
உறுதி செய்யும்
வகையில் கண்காணிப்பு
குழு ஒன்றை
அந்த நாட்டுக்கு
அனுப்பவுள்ளோம். இலங்கையில் ஜனநாயகம் காக்கப்படுவதற்கும், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஆட்சி
ஏற்படுவதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து பாடுபடும் இவ்வாறு அவர்
தெரிவித்திருக்கிறார்.
0 comments:
Post a Comment