நாமெல்லாம் மரந்தானே!
எழுத்தாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ். முத்துமீரான்
அமைச்சர் வருகின்றார், அவரோடு கூட
அரமந்திரி, கால் மந்திரி அவிசனாக்கள்
எல்லோரும் வாறாங்க, எடுங்கடா மாலைகளை
எல்லோருக்கும் போடுங்கடா
அடிங்கடா சீட்டிகள அவங்களெல்லாம் சிரிப்பதற்கு
பாராளுமன்றத்தில் பதினெட்டாம் சரத்திக்கு
முட்டுக்குடுத்த முஸ்லிம் தலைவனுக்கு
தட்டுங்கடா மேளத்தை தரணியெங்கும் கேக்கட்டும்
கொலவையை உட்டு நல்லா கூத்த நடத்திங்கடா
முஸ்லிம் சமூகம் முதுகெலும்பில்லா சமூகம்தான்
தக்பீரைக் கேட்டாத் தலைதெறிக்க ஓடிவரும்
சூடுசுறணயற்ற சோம்பேறிச் சமூகத்தை
மரத்திலே கட்டிவெச்சி மாடாகச்சாய்ப்பதற்கு
மந்திரி வருகிறார் மரியாதை செய்யிங்கடா.
ஓதுங்கடா சலவாத்தை, உண்மை அழிவதற்கு
நமக்கென்ன உரிமையெல்லாம் நாமெல்லாம் மரந்தானே!
அரமந்திரி, கால் மந்திரி அவிசனாக்கள்
எல்லோரும் வாறாங்க, எடுங்கடா மாலைகளை
எல்லோருக்கும் போடுங்கடா
அடிங்கடா சீட்டிகள அவங்களெல்லாம் சிரிப்பதற்கு
பாராளுமன்றத்தில் பதினெட்டாம் சரத்திக்கு
முட்டுக்குடுத்த முஸ்லிம் தலைவனுக்கு
தட்டுங்கடா மேளத்தை தரணியெங்கும் கேக்கட்டும்
கொலவையை உட்டு நல்லா கூத்த நடத்திங்கடா
முஸ்லிம் சமூகம் முதுகெலும்பில்லா சமூகம்தான்
தக்பீரைக் கேட்டாத் தலைதெறிக்க ஓடிவரும்
சூடுசுறணயற்ற சோம்பேறிச் சமூகத்தை
மரத்திலே கட்டிவெச்சி மாடாகச்சாய்ப்பதற்கு
மந்திரி வருகிறார் மரியாதை செய்யிங்கடா.
ஓதுங்கடா சலவாத்தை, உண்மை அழிவதற்கு
நமக்கென்ன உரிமையெல்லாம் நாமெல்லாம் மரந்தானே!
- எஸ். முத்து
மீரான்-
----2014.12.15---
----2014.12.15---
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.