திரைப்பட தயாரிப்பாளர் இப்றாஹிம் ராவுத்தர் மரணம்
திரைப்பட தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவருமான இப்றாஹிம் ராவுத்தர் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 63.
இதயம் மற்றும் சீறுநீரக பாதிப்பால் சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த ராவுத்தர், உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த சில வாரங்களாக சுய நினைவை இழந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராவுத்தரை, சிங்கப்பூருக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தார் திட்டமிட்டிருந்தனர்.
இதற்கிடையே, சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார்.
0 comments:
Post a Comment