முன்னாள் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சலீம் உட்பட
இருவர் விபத்தில் பலி
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
திருகோணமலை மாவட்டம் சேருநுவர பகுதியில் இன்று 16 ஆம் திகதி வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் கொல்லப்பட்டு மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ். சலீம் மற்றும் மணல் வியாபாரியான எம்.கலீல் (48) ஆகியோரே மரணமடைந்துள்ளனர்.
காத்தான்குடியிலிருந்து வியாழக்கிழமை காலை வேன் ஒன்றில் கிண்ணியாவுக்குச் சென்று கொண்டிருந்த போது சேருநுவர எனும் பிரசேத்தில் வைத்து இவர்கள் பயணித்த வேன் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
படுகாமடைந்த மூவரும் அருகிலிருந்த சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வாகன சாரதி எம். கலீல் (48) என்பவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
ஏனைய இருவரையும் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு வைத்து காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ். சலீம் (வயது 52) உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த முஹம்மது புகாரி (வயது 53) தொடர்ந்தும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த விபத்துச் சம்பவம் பற்றி நேருநுவர பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
நித்திரை மயக்கத்திலேயே இந்த வாகன விபத்து சம்பவித்ததாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த விபத்தில் மரணமடைந்ந முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ். சலீம் காத்தான்குடி நூரி புத்தக நிலையம் மற்றும் நூரி டெக்டைல்ஸ் ஆகிய வர்த்தக ஸ்தாபனங்களில் உரிமையாளரும்,சமூக சேவையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment