குவைத் நாட்டில் ஒவ்வொரு குடிமகனும்
டி.என்.ஏ அறிக்கையை
தாக்கல் செய்ய வேண்டும்
குவைத்
நாட்டில் நாசவேலைகளில் ஈடுபடும் நபர்களை
கண்காணிக்க புதிய யுக்தியாக ஒவ்வொரு குடிமகனும் டி.என்.ஏ அறிக்கையை தாக்கல்
செய்ய வேண்டும் என அந்நாட்டு அரசு முடிவு
செய்துள்ளது.
குவைத்தில்
கடந்த மாதம்
மசூதி ஒன்றில்
தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்
26 பேர் உயிரிழந்தனர்.
227 பேர் படுகாயமடைந்தனர்.
இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பு
ஏற்றது. இந்த
நிலையில் நாசவேலைகளில்
ஈடுபடும் நபர்களை
கண்டறிய குவைத் இந்த புதிய யுக்தியை வகுத்துள்ளது.
அதன்படி
குவைத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் தனது
டி.என்.ஏ அறிக்கையை
அரசிடம் தாக்கல்
செய்ய வேண்டும்.
குவைத்தில் ஏதாவது தாக்குதல் நடத்தப்பட்டால், தாக்குதலில்
ஈடுபட்ட நபர்களின்
டி.என்.ஏ.யும்,
குடிமக்கள் தாக்கல் செய்த டி.என்.ஏ.யும் ஒப்பிடப்படும்.
இது
குறித்து அந்நாட்டின்
ஜமால் அல்
ஓமர் கூறுகையில்,
"நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க எந்த திட்டத்தையும்
நாங்கள் ஆதரிப்போம்"
என்று தெரிவித்துள்ளார். டி.என்.ஏ அறிக்கையை
தாக்கல் செய்யாதவர்கள்
ஒரு வருட
சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று குவைத்
அரசு அதிரடி
உத்தரவு பிறப்பித்துள்ளது.
தவறான அறிக்கையை
தாக்கல் செய்தால்
7 ஆண்டு சிறைத்தண்டனை
விதிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment