தொலைக்காட்சிகளிலும்,ஊடகங்களிலும்
பேசி கொண்டிருந்த
நாங்கள் இன்று நேரடியாக
இந்த அரசியலுக்கு வந்திருக்கிறோம்
- கல்வியலாளர் அன்வர் முஸ்தபா
தொலைக்காட்சிகளிலும்,ஊடகங்களிலும் பேசி கொண்டிருந்த நாங்கள் நேரடியாக இன்று இந்த அரசியலுக்கு வந்திருக்கிறோம். என இன்று சாய்ந்தமருதில் இடம்பெற்ற
கட்சியின் மாவட்டக் காரியாலய திறப்புவிழாவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சர்வதேச
விவகார பணிப்பாளரும் மயில் சின்னம் இலக்கம் 01 வேட்பாளருமான கல்வியலாளர் அன்வர் முஸ்தபா
தெரிவித்தார்.
கல்வியலாளர் அன்வர் முஸ்தபா தொடர்ந்து பேசுகையில் மேலும் கூறியதாவது,
முஸ்லிம்
காங்கிரஸை உருவாக்கி
பெரும் தலைவர் அஸ்ரப் அவர்கள் உரிமைகளையும்
எமது பிரதேசங்களின்
அபிவிருத்தியையும் பற்றி பேசி
சாதித்தார், துரதிஷ்ட வசமாக நாம் அவரை
இழந்ததன் பின்னர்
கடந்த பதினைந்து வருடங்களாக அரசியலில் அனாதையாக
இந்த அம்பாறை
மாவட்டம் காணப்படுகிறது.
அதிலும் சாய்ந்தமருது
மு.காங்கிரசின்
அசைக்க முடியாத
கோட்டை என்று
நாம் திடம்
பூண்டிருந்தோம்.ஆனால் இன்று
இந்த கோட்டை
பாழடைந்து கிடக்கிறது.காரணம் உங்கள்
அனைவருக்கும் தெரியும் நாம் வளர்த்தெடுத்த மரம்
தான் என்பது.
கடந்த
காலங்களில் நாம் பல அனர்த்தங்களை சந்தித்த
போதும்2002 ம் ஆண்டில் புலிகளுக்கும் அரசாங்கதிற்கும் யுத்த
நிறுத்த
உடன்படிக்கை நடைபெற்ற போது
அந்த அரசின்
பங்காளியாக அமைச்சை அலங்கரித்துக் கொண்டிருந்த அந்த
தலைமை சமுதாயத்திற்கு
நன்மை பயக்கும்
எந்த நடவடிக்கைகளும்
எடுக்க வில்லை
அதேபோல சுனாமியால்
பாதிக்க பட்ட
மக்களுக்கு என்னத்தை செய்திருக்கிறார்.
ஒன்றுமில்லை.அதேபோல கிரிஸ் மனிதன் முதல்
பொது பல
சேனாக்களின் அட்டுழியங்க்களை கூட எதிர்த்து
நிற்க முடியாமல்
இருந்த இந்த
தலைமையை நாங்கள்
கண்டும் காணாமல்
இருக்க எங்கள்
மனம் இடம்
கொடுக்க வில்லை.
அதனால்
தான்
தொலைக்காட்சிகளிலும்,ஊடகங்களிலும் பேசி
கொண்டிருந்த நாங்கள் நேரடியாக இந்த
அரசியலுக்கு வந்திருக்கிறோம்.பேச வேண்டிய இடத்தில்
பேசுவதற்காக. எங்கள் அரசியல் முன்னதுக்க நாங்கள்
ஏழையின் பசியறிந்த
ஏழைகளின் உறவாளி
அமைச்சர் றிஷாதின் தலைமைத்துவத்தை சரியாக
உணர்ந்து அவருடன்
கைகோர்தோம்.
அல்ஹம்துலில்லாஹ்
எங்களது வேட்புமனு
அம்பாறைக்கு செல்ல முன்னரே எங்களது ஆசனம்
உருதிப்படுத்தபட்டதை நீங்கள்
அறிவீர்கள்.இரண்டாவது ஆசனம் பெற 90% முஸ்தீபுகள்
முடித்து 03வது ஆசனத்தை நோக்கி எங்களது
பயணத்தை தொடர்ந்துள்ளோம்.முஸ்லிம் காங்கிரஸ்
எங்களை பகடைக்காய்களாக
மாற்ற முடியாது
என்பதை நான்
இவர்களுக்கு காட்ட வேண்டும்.
எனது
நண்பர் ஜெமீல்
முஸ்லிம் காங்கிரஸில் இருந்தபோது அவருடன் நான்
விவாதிப்பேன்.அப்போது அவர் என்னிடம் சொல்வார்
தலைமைத்துவம் விடும் பிழைகளை நாங்கள் நன்றாக
அறிவோம்,ஆனால்
அதனை மாற்றியமைத்து
சரியாக வழிநடத்தலாம்
என என்னுகிறோம்
என.இந்த
சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரஸுக்கு ஜெமீல்தான்
முட்டு கொடுத்து
கொண்டிருந்தார்.அவர் கட்சியை விட்டு வெளியேறிய
பின்னர் மரத்தின்மேல
மயில் அமர,
மரம் கோடை
சாய்ந்தது , மயில் தொகை விரித்தாடுகிறது.......
சத்தியம்,நேர்மை நிச்சயம் வெல்லும்,தன்மான தலைவர்
றிஷாதின்
அணி சாதிக்கும்
உங்கள்
வாக்குகள் மூலம் எங்களை பாராளுமன்றம் அனுப்புங்கள்.
கோட்டைகளை வெளிச்சமாக்குகிறோம் உங்கள்
வாக்குகளை மயிலுக்கு
வழங்குங்கள் எனது இலக்கம் ஒன்றுக்கும்
வழங்குங்கள் இவ்வாறு கல்வியலாளர் அன்வர் முஸ்தபா இங்கு பேசுகையில்
கூறினார்.
இந்நிகழ்வில்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் ,செயலாளர் நாயகம் வை. சாஹுல் ஹமீட் ,தவிசாளர்
எம்.எஸ்.எஸ். அமீர் அலி கட்சியின் தேசிய ,அமைப்பாளர் ஏ.எம். ஜமீல் மற்றும் வேட்பாளர்களும்
பெருந்திரளான கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்
0 comments:
Post a Comment