திசை மாறியுள்ள  தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ முறைமை


நாடாளுமன்றம் செல்வதற்கான முயற்சிகளில் தாம் ஈடுபட்டால் தனது கெளரவத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படும் மற்றும் தேர்தல் கால சச்சரவுகளில் எம்மால் ஈடுபட முடியாது என்பன போன்ற பல காரணங்களினால் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குள் செல்ல முடியாத  நாட்டிலுள்ள சிறந்த புத்திஜீவிகளை சகல சமூகங்களிலிருந்தும் கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்குகளின் எண்ணிகைகளுக்கு ஏற்ப தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன கொண்டு வந்த நல்லதொரு திட்டமே நாடாளுமன்றத்திற்கு 29 உறுப்பினர்களை  தேசியப்பட்டியல் மூலம் பெற்றுக்கொள்வது என்னும் முறைமையாகும்.
ஆனால், அந்த முறைமை இன்று எந்த நிலைக்கு போய்விட்டது என்பதை அவதானிக்கும் போது மிகுந்த கவலையை புத்திஜீவிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்றே கூற வேண்டியுள்ளது.
இரு பிரதான தேசியக் கட்சிகளும் தேசியப் பட்டியலில் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்துள்ள மக்கள் பிரதிநிதிகளின் பெயர் பட்டியல்களைப் பார்த்தால் அப்பட்டியல்களில் நாட்டினதும் மக்களினதும் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்த சிறந்த புத்திஜீவிகளின் பெயர்களுக்கு பதிலாக முன்னாள் அமைச்சர்களும், வேட்பாளர் பட்டியலில் இடம் கொடுக்க முடியாமல் போனவர்களினதும்  பெயர்களையே காணக்கூடியதாக உள்ளது.
இப்படியான நிலையில் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக அல் குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என கூறிக் கொண்டிருக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட தனது கட்சியின் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியிடம் சமர்ப்பித்துள்ள தேசியப் பட்டியலில் முற்றிலும் அரசியல்வாதிகளையும் அரசியல்வாதிகளைச் சார்ந்தவர்களையும்  மாத்திரமே பட்டியலிட்டு வழங்கியிருப்பது முஸ்லிம் சமூகத்தினரிடையே சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மசூரா அடிப்படையிலேயே எங்களின் முடிவுகள் எல்லாம் இருக்கும் என்று தருனம் பார்த்து சமூகத்திடம் கூறும் முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியலுக்கு பெயர்களை சிபார்சு செய்யும் போது மசூரா சபையைக் கூட்டி சமூகம் ஏற்றுகொள்ளக் கூடிய சிறப்பான முடிவுகளை எடுப்பது இல்லையா? எனவும் கட்சி உருவாக்கப்பட்ட கிழக்குப் பிரதேசத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள கட்சியின் ஆரம்ப கால போராளிகளால் கேள்விகள் எழுப்பப்படுகின்றது.
முஸ்லிம்களிடையே சமூகத்திற்கு சிறப்பான சேவைகள் செய்த அரசியல்வாதிகள் அல்லாத  சிறந்த கல்விமான்கள் இல்லையா? மார்க்கப் பெரியார்கள் இல்லையா? ஒரு சிறந்த நிதானமான பேச்சார்த்தல்மிக்க உலமா ஒருவரை முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல்  மூலமாக நாடாளுமன்றம் அனுப்ப முடியாதா? இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் வருகின்ற போது மதிப்புக்குரிய உலமா ஒருவர் கட்சியின் சார்பாக இருந்தால் சிறப்பாகவும் நிதானமாகவும் பதிலளிக்க முடியுமல்லவா? இவ்வாறெல்லாம் சமூகத்தைப் பற்றிச் சிந்திக்கும் ஆரம்பகால கட்சிப் போராளிகள் கட்சியின் தேசியப் பட்டியல் குறித்து கவலை வெளியிட்டிருப்பதுடன் விமரிசனமும் செய்து கொண்டிருக்கின்றனர்.
இதோ முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தேசியப்பட்டியலுக்காக வழங்கப்பட்டிருக்கும் பெயர் பட்டியல்,
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
மொஹமட் தம்பி ஹசன் அலி (கட்சியின் செயலாளர் நாயகம்)
நிஸாம் காரியப்பர் (கல்முனை மாநகர சபை மேயர்)
அப்துல் ரவூப் அப்துல் ஹபீஸ் ( அமைச்சரின் ஊடக இணைப்புச் செயலாளர்)
முஹமட் ஹபீர் முஹமட் சல்மான் (இலங்கை காணி மீட்பு அதிகார சபையின் தலைவர்)
Ahamed Jiffrey Check SLMC names given for UNP national list leader brother and cousin salman why can't put out of his family voters please think before choose candidate for voting if you elect Muslim congress candidates it will help them to demand good deal not for community interest







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top