22 தேர்தல் மாவட்டங்களில்
501 வேட்பு மனுக்கள் ஏற்பு ; 36 நிராகரிப்பு : 6151 பேர் போட்டி
எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்
தேர்தலில் 22 மாவட்டங்களில்
இருந்தும் இம்முறை 6151 பேர்
போட்டியிடுகின்றனர்.
225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான
போட்டியில் இம்முறை 22 மாவட்டங்களில்
அரசியல் கட்சிகளும் சுயேட்சை அணிகளும் நேரடியாகவே களமிறங்கியுள்ளன.
இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்
குழுக்களின் 537 வேட்பு மனுக்கள்
நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றில் 36 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் மொத்தமாக 501 வேட்புமனுக்களே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
அரசியல் கட்சிகள் 312 வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்த
நிலையில், அவற்றில் 12 நிராகரிக்கப்பட்டு, 300 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
சுயேட்சைகள் தாக்கல் செய்த 225 வேட்பு மனுக்களில் 24 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் இம்முறை அரசியல் கட்சிகளில் இருந்து 3653
பேரும், சுயேட்சைக் குழுக்கள் சார்பாக 2498 பேரும் பாராளுமன்றத்திற்கு போட்டியிடுகின்றனர்.
0 comments:
Post a Comment