அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
அம்பாறை மாவட்டச்
செயலகத் திறப்பு விழா
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டச் செயலகம் இன்று 25 ஆம் திகதி சனிக்கிழமை சாய்ந்தமருதில் பெரும் திரளான மக்களின்
பங்குபற்றுதலுடன் திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கட்சியின் தேசியப் பட்டியல்
வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இத் திறப்பு விழாவில் அகில இலங்கை மக்கள்
காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கலந்து கொண்டு மாவட்டச்
செயலகத்தைத் திறந்து வைத்தார்.
இத்திறப்பு விழா வைபவத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்
அலி, கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீத், கட்சியின் வேட்பாளர்களான முன்னாள்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.அப்துல் மஜீத், முன்னாள் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப், தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற உபவேந்தர்
எஸ்.எம். இஸ்மாயில். கல்வியியலாளர் அன்வர் எம்.முஸ்தபா உட்பட சகல வேட்பாளர்களும் மற்றும்
கல்முனை மாநகர சபை உறுப்பினர் பெஸ்டர் றியாஸ் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கட்சியின் இம்மாவட்டச் செயலகத் திறப்பு விழாவில் ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால போராளிகள் பலர் அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவருக்கு பொன்னாடை போர்த்தி அவரை ஆரத்தழுவி மக்கள் காங்கிரஸில்
இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment