குருநாகல் மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளதா?
முஸ்லிம் கட்சி அரசியல்வாதிகளின் குத்து வெட்டுக்கள்!
குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் கட்சி அரசியல்வாதிகளிடையே குத்து
வெட்டுக்கள் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குருநாகல் மாவட்டத்திற்கான ஐக்கிய தேசிய
கட்சி வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த றிஸ்வி ஜவஹர்ஷா 11ஆம் திகதி இரவு கடைசி ஆளாக கையொப்பமிட்டதாகவும்
நேர்மையாக இஹ்லாசுடன் முஸ்லிம் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து வந்த தனக்கு குருநாகல்
மாவட்டத்திற்கான முஸ்லிம் பாராளுமன்ற கனவை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் கை கூடி
வந்த சூழ்நிலையில் விரோதிகளின் சூழ்ச்சியில்
தனது வாய்ப்பு இல்லாமல் போயிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது சம்மந்தமாக எமக்கு மறுபக்கத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டதாவது,
குருநாகல் மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் பட்டியலில்
ஏற்கனவே அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக டாக்டர்
சாபி என்பவரே ஒப்பமிட்டிருந்ததாகவும் அது முஸ்லிம் காங்கிரஸின் தலையீட்டில் அவரின் பெயர் (டிபெக்ஸ் செய்யப்பட்டு ) நீக்கம்
செய்யப்பட்டு சட்டத்தரணி றிஸ்வி ஜவஹர்ஷாவினால் ஒப்பமிடப்பட்டதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அறிந்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் கடுமையாக விவாதம் செய்து
பின்னர் ஆரம்பத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஒப்பமிட்ட டாக்டர் சாபியையே
இறுதியில் ஒப்பமிடவைத்து குருநாகல் மாவட்டத்தின் வேட்பாளர் பட்டியல் கையளிக்கப்பட்டதாகவும்
தகவல் தெரிவிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment