கல்முனை ”ஏ.ஆர். மன்சூர் பொதுநூலகம்”கவனிப்பாரற்ற நிலையில்
மாநகர சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானம்
ஒரு ஏமாற்று நடவடிக்கை என
வாசகர்கள் கவலை
கல்முனை நகரில் உள்ள பொது நூலகம் நவீன
மயப்படுத்தப்பட்டு அந்நூலகத்திற்கு ”ஏ.ஆர். மன்சூர் பொதுநூலகம்” எனப் பெயரிடப்படும்
என கல்முனை மாநகர சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானம் ஒரு ஏமாற்று நடவடிக்கை என இப்பிரதேச
தமிழ், முஸ்லிம் வாசகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பாழடைந்த இடம்போன்று காட்சியளிக்கும் இப்பொது நூலகத்தில் ”ஏ.ஆர். மன்சூர்
பொதுநூலகம்”என்று மாத்திரம் சுவரில் எழுதி கடந்த 2014.10.23 ஆம் திகதி திறந்து
வைக்கப்பட்டுள்ளதே தவிர வேறு எதுவித மாற்றமும் இங்கு ஏற்படுத்தப்படவில்லை எனவும் வாசகர்கள்
தெரிவிக்கின்றனர்.
முன்னாள் வர்த்தக,வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின்
முயற்சியின் காரணமாக 1981 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்ட இப் பொது நூலகம்
இன்று வரை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்த அபிவிருத்தியும் இன்றி பல குறைபாடுகளுடன்
பாழடைந்த ஒரு இடத்தில் உள்ளது போன்று இப்பொது நூலகம் இயங்கிவருகின்றது என வாசகர்களால்
குறை தெரிவிக்கப்படுகின்றது.
இப்பொது நூலக வளவின் முன் பகுதிக்கு எல்லையிட்டு மதில் சுவர் எதுவும் அமைக்கப்படவில்லை. பஸ்கள்,
ஆட்டோக்கள் என்பன நூலக வளவிற்குள் இரைச்சலுடன் சென்றுதான் திருப்பி எடுக்கப்படுகின்றன. இதன்போது எழுப்பப்படும் ஹார்ன்
சப்தங்களால் நிம்மதியாக வாசிக்க முடிவதில்லை எனவும் வாசகர்கள் குறை தெரிவிக்கின்றனர்.
கல்முனையில் பொது நூலகம் எங்கு இருக்கின்றது என்பதை அறிந்து
கொள்வதற்கு இதற்கென பெயர் பலகை நடப்படவில்லை.
வாசகர்களின் மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் என்பனவற்றை பாதுகாப்பாக நிறுத்தி
வைப்பதற்கு வாகனத் தரிப்பிடம் முறையாக அமைத்துக் கொடுக்கப்படவில்லை.
இப்பிரதேசத்தில்
அன்றிருந்த மறைந்த டாக்டர் முருகேசுப்பிள்ளை, டாக்டர் ஜெகநாதன், கல்விமான் சங்கைக்குரிய சகோதரர்
எஸ். ஐ.
ஏ. மத்தியூ,
போன்றோர் உட்பட
சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை, நற்பிட்டிமுனை போன்ற
பிரதேசங்களைச் சேர்ந்த கல்விமான்கள் கொண்ட ஆலோசனைக்
குழுவொன்றை அமைத்து அவர்களின் வழிகாட்டல்களையும் பெற்றுக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இப் பொது நூலகத்தின் நிலை இன்று பரிதாபத்திலும்
பரிதாபகமாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நூலகத்திற்கு
தேவையான அறிவு
சார்ந்த நூல்களை
நூலகத் துறையில்
தேர்ச்சி பெற்ற எஸ்.எம். கமால்தீன்
அவர்களின் ஆலோசனை
பெற்றே அன்று
புத்தகங்கள் இந்தியாவுக்குச் சென்று வாங்கப்பட்டு இப்
பொது நூலகத்திற்குக்
கொண்டு வரப்பட்டன எனத்
தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், இன்று இப் பொது நூலத்தின் வளர்ச்சி கருதி ஆக்கபூர்வமான
நடவடிக்கைகள் எதுவும் சம்மந்தப்பட்டவர்களால் எடுக்கப்படுவதாக இல்லை எனவும் தமிழ்,
முஸ்லிம் வாசகர்களால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இப்பொது நூலகத்தின் அவல நிலையை இங்கு காட்சிப்படுத்தியுள்ளோம்.
- மக்கள் விருப்பம்பொது நூலக வள்விற்குள் பஸ் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி |
பொது நூலக வள்விற்குள் பஸ் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி |
இதுதான் பொது நூலகத்தின் பெயர் பலகை! |
0 comments:
Post a Comment