யாகூப் மேமன் இன்று காலை தூக்கிலிடப்பட்டார்
மும்பை
தொடர் குண்டு
வெடிப்பு வழக்கில்
தொடர்புடைய முக்கிய குற்றவாளி யாகூப் மேமன்
அவருடைய பிறந்த
நாளான இன்று
காலை தூக்கிலிடப்பட்டார்.
யாகூப்
மேமன் தூக்கிலிடப்பட்டதை
அடுத்து மும்பையில்
அசம்பாவிதச் சம்பவம் எதுவும் நிகழாமல் தடுக்கும்
வகையில் பாதுகாப்பு
அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
யாகூப்
மேமன் தூக்கிலிடப்படுவதற்கு
முன்னதாக அவரது
குடும்பத்தினர் அவருக்கு பிறந்த நாள் கேக்
மற்றும் வாழ்த்து
செய்தியை அனுப்பி
வைத்தனர். இது
குறித்து யாகூப்பிடம்
தெரிவித்தபோது எவ்வித மாற்றத்தையும் தெரிவிக்கவில்லை என
சிறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
யாகூப் மேமன், கடந்த ஆண்டு அரசியல் பொருளாதாரத்தில் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற நிலையில், அந்த பட்டத்தை வாங்காமலேயே தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.
இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை வழியாக 2010ஆம் ஆண்டு இலக்கியத்தில் பட்டம் பெற்ற யாகூப், அரசியல் பொருளாதாரத்திலும் 2014ஆம் ஆண்டு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றார்.
இந்த நிலையில், யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, அவர் பிறந்த நாளான ஜூலை இன்று 30ம் திகதியன்று தூக்கிலிடப்பட்டார்.
0 comments:
Post a Comment