யாகூப் மேமனுக்கு நாளை தூக்கு
நாக்பூர் சிறைச்சாலைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு
பிறந்த நாளிலேயே தூக்கு தண்டனை
முதுகலை பட்டத்தைக் கூட பெற
முடியாத பரிதாப நிலை
மும்பை குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களில் ஒருவரான யாகூப் மேமனின்
கருணை மறுசீராய்வு மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று தள்ளுபடியானதை அடுத்து அவருக்கு தூக்கு
தண்டனை உறுதியானது. நாளை காலை நாக்பூர் சிறையில் அவர் துாக்கிலிடப்படுகிறார். இதையொட்டி
நாக்பூர் சிறைச்சாலை பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாகூப் மேமன், கடந்த ஆண்டு அரசியல் பொருளாதாரத்தில் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற நிலையில், அந்த பட்டத்தை வாங்காமலேயே தூக்கிலிடப்பட உள்ளார்.
இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை வழியாக 2010ஆம் ஆண்டு இலக்கியத்தில் பட்டம் பெற்ற யாகூப், அரசியல் பொருளாதாரத்திலும் 2014ஆம் ஆண்டு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றார்.
இந்த நிலையில், யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, அவர் பிறந்த நாளான ஜூலை 30ம் திகதியன்று தூக்கிலிடப்பட உள்ளார்.
0 comments:
Post a Comment