கொடூர விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாமல்
அதனுடன் செல்பி எடுத்த
இளைஞர்
செல்பி
மோகம் பலரையும்
மனிதாபிமானம் இல்லாத மனிதர்களாக மாற்றி வருகின்றது.
அந்த வகையில்,
இங்கிலாந்தின் மையப்பகுதியில் கொடூர விபத்து நடந்த
இடத்தில் வாலிபர்
ஒருவர் செல்பி
எடுத்துக் கொண்டது
பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
லண்டனின்
மையப்பகுதிக்கு அருகே உள்ள ஏ-406 என்ற பைபாஸ்
ரோட்டில் நேற்று
மதியம் 2 லாரியும்,
காரும் மோதி
விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த
இளம்பெண் உயிருக்கு
போராடிய நிலையில்
இருந்தார். சம்பவ இடத்திற்கு வந்த அவசரகால
மீட்புப்படையினர் ஒரு மணி நேரமாக போராடி
அந்த இளம்பெண்ணை
மீட்டு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர்.
மேலும் 2 பெண்கள்
படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தால்
அப்பகுதியில் சாலை வெகுநேரமாக மூடப்பட்டது.
இந்த
சம்பவங்களுக்கிடையில், விபத்து நடந்த
பகுதிக்கு அருகே
உள்ள பாலத்தின்
மீது நின்று
கொண்டிருந்த வாலிபர் ஒருவர், தனது ஐபோனில்,
தன்னோடு விபத்து
நடந்த இடமும்
கேமராவில் தெரியுமாறு
செல்பி எடுத்துக்
கொண்ட காட்சி
இங்கிலாந்து ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியானது.
இதை பார்த்த
பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
0 comments:
Post a Comment