எனது பெயர் தேசியப்பட்டியலில் இல்லாதது வருந்தத்தக்கது
ஈழப் போரில் உதவிய என்னை ஏமாற்றிவிட்டனர்
கருணா என்னும் முரளிதரன்
புலம்பல்
ஈழப் போரில் உதவி, தமிழர்களை ஏமாற்றிய தன்னையே ஏமாற்றிவிட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் புலம்பியுள்ளார்.
தேசியப்பட்டியலில் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி சுசில் பிரேம் ஜயந்தவும், அனுர பிரியதர்சன யாப்பாவும் எனக்கு வாக்குக் கொடுத்தனர். ஆனால் கடைசியில் எனது பெயர் தேசியப்பட்டியலில் இல்லாதது வருந்தத்தக்கது என்று கருணா கூறியுள்ளார்.
ஈழப் போர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த போது, கோத்தபாய ராஜபக்ஸவும், லக்ஸ்மன் ஹுலுகல்லவும், இலங்கை அரசுக்கு உதவ வேண்டும் என்று என்னிடம் உதவி கோரினர்.
அந்த நேரத்தில் நாட்டுக்காகவே நான் மிகவும் ஆபத்தான ஒரு முடிவை எடுத்தேன். அதன் காரணமாக, தமிழர்களின் கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளானேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.