திகாமடுல்ல மாவட்டத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்த
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள்
அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலில் (துஆ) பிரார்த்தனை
(அகமட் எஸ். முகைடீன்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்னர் அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் கலந்து கொண்ட இத் (துஆ) ப் பிரார்த்தனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களான கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப், சிரேஷ்ட பொலிஸ் அத்திகட்சகர் அப்துல் மஜீட், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயில் , கல்விமான் அன்வர் முஸ்தபா உள்ளிட்ட ஏனைய வேட்பாளர்கள் மற்றும் பெரும் எண்ணிகையான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு மௌலவி சலீம் விஷேட துஆ பிரார்த்தனை செய்தார். இதன்போது அங்கு கூடியிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்கள் வேட்பாளர்களை புடை சூழ்ந்து ஆரத் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு எதிர்வரும் பாராளு மன்றத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு அம்பாறை மாவட்டத்தில் ஒரு பிரநிதித்துவம் நிச்சயிக்கப்பட்டு விட்டதுடன் தூய எண்ணத்துடன் நேர்மையான பிரச்சாரப் பணியினை முன்னெடுப்பதன் மூலம் இன்னுமோர் பிரதிநிதித்துவத்தை பெற முடியும் எனத் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment