நாடு திரும்புகிறார் சந்திரிகா
மஹிந்தவுக்கு வேட்பு மனு பெற்று கொடுத்தது
தொடர்பாக
கருத்துக்களைத் தெரிவிக்கக்
கூடும் என எதிர்பார்ப்பு?
லண்டனுக்கு
விஜயம் செய்த
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க
குமாரதுங்க இன்று நாடு திரும்பவுள்ளார். அவர்
நாடு திரும்பியதும்
முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணியில்
வேட்பு மனு
பெற்று கொடுத்தது
தொடர்பாக விசேட
கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்
தேர்தலில் நல்லாட்சிக்காக
ஐக்கிய தேசிய
முன்னணியுடன் இணைந்து சந்திரிக்கா செயற்பட திட்டமிட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக
தேர்தல் களத்தில்
சந்திரிக்கா குதிப்பார் என்றும் அரசியல் வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment