பிறந்த மண்ணை வந்தடைந்தது
அப்துல் கலாம் உடல்
மக்கள் கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் உடல், ராமேசுவரத்தில்
இஸ்லாமிய முறைப்படி
நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது
ராமேசுவரம்
இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய குடியரசுத்
தலைவர் அப்துல்
கலாமின் உடலுக்கு
அரசியல் தலைவர்கள்,
பல்வேறு துறைகளைச்
சார்ந்த பிரபலங்கள்,
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னாள்
இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின்
உடலுக்கு அஞ்சலி
செலுத்த ராமேசுவரத்தில்
அரசியல் தலைவர்களும்,
பொதுமக்களும் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மதுரையில்
இருந்து மண்டபம்
கொண்டு செல்லப்பட்ட
கலாம் உடலுக்கு
தமிழக அமைச்சர்கள்
அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அங்கிருந்து
இராணுவ
வாகனத்தில் கலாம் உடல் ராமேஸ்வரம் கொண்டு
செல்லப்பட்டது.
வழி
நெடுகிலும் சாலையில் இரு புறங்களிலும் பொதுமக்கள்
குவிந்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
ராமேசுவரத்தில்
பஸ் நிலையம்
அருகே மைதானத்தில்
கலாமின் உடல்
பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு
8 மணி வரை
பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
தமிழகத்தில்
உயர் நீதிமன்றம்
உட்பட அனைத்து
நீதிமன்றங்களுக்கும் நாளை விடுமுறை
என்று சென்னை
உயர் நீதிமன்ற
தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
இதேவேளை,''அப்துல் கலாம் அடக்கம்
செய்யப்படும் இடத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
சென்னை குரோம்பேட்டை
எம்ஐடி கல்லூரிக்கு
அப்துல் கலாம்
பெயரை சூட்ட
வேண்டும்'' என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேகாலயா
தலைநகர் ஷில்லாங்கில்
உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில்
நேற்று முன்தினம்
(திங்கள்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்துல்
கலாம் திடீரென
மயங்கி விழுந்தார்.
முதலுதவி சிகிச்சைக்குப்
பிறகு அவர்,
உடனடியாக அருகில்
உள்ள பெதானி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள்,
கலாம் மாரடைப்பால்
ஏற்கெனவே உயிரிழந்து
விட்டதாக தெரிவித்தனர்.
அப்துல்
கலாமின் உடல்
மேகால யாவில்
இருந்து நேற்று
காலை டில்லிக்கு கொண்டு வரப்பட்டது.
அவரது உடலுக்கு
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர்
நரேந்திர மோடி
உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கலாமின்
இறுதிச் சடங்கு
அவரது சொந்த
ஊரான ராமேசுவரத்தில்
நாளை நடைபெறுகிறது.
இதனையொட்டி அவரது உடல் இராணுவ விமானம் மூலம்
இன்று (புதன்
கிழமை) மதுரை
கொண்டு வரப்பட்டது.
மதுரை
விமான நிலையத்தில்
ஆளுநர் ரோசய்யா,
கலாம் உடலைப்
பெற்றுக் கொண்டார்.
அவரது உடலுக்கு
ஆளுநர் ரோசய்யா,
அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடல்
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் கொண்டு
செல்லப்பட்டது.
மறைந்த
அப்துல் கலாமுக்கு
மரியாதை செலுத்தும்
விதமாக அன்னாரது
இறுதிச்சடங்கு நடைபெறும் நாளான 30.7.2015 அன்று அரசு
விடுமுறை வழப்பட்டுள்ளது.
அப்துல்
கலாமின் இறுதிச்
சடங்கு நிகழ்ச்சியில்
பிரதமர் நரேந்திர
மோடி கலந்து
கொள்கிறார்.
அப்துல்
கலாமின் உடல்,
ராமேசுவரத்தில் இஸ்லாமிய முறைப்படி வியாழக்கிழமை நல்லடக்கம்
செய்யப்படுகிறது.
இதுகுறித்து
கலாமின் பேரன்
ஷேக் சலீம்
கூறும்போது, "கலாமின் இறுதிச்
சடங்குகளுக்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகளின்
உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் வேகமாக செய்து
வருகிறது.
இறுதி
அஞ்சலி நிகழ்ச்சியில்
பிரதமர் மோடி,
ஆந்திரா உட்பட
6 மாநிலங்களின் முதல்வர்கள், மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாட்டுப்
பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
அதைத்
தொடர்ந்து வியாழக்கிழமை
காலை 10.30 மணிக்கு அவரது உடல் இஸ்லாமிய
முறைப்படி நல்லடக்கம்
செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment