26 வருடங்களுக்கு முன்
கல்முனைப் பிரதேசத்தில் ஒரு கசப்பான சம்பவம்



1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் கல்முனைப் பிரதேசத்தில் பரபரப்பானதும் கவலை தரக்கூடியதுமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பப் பெண் உட்பட நால்வர் ஆயுதம் தாங்கிய தமிழ் தீவிரவாதக் குழு ஒன்றினால் கடத்தப்பட்ட சம்பவமே அதுவாகும்.
இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக தினபதியில் 1989.11.14  ஆம் திகதி முதல் பக்கத்தில் இவ்வாறு செய்தியாக வெளியிடப்பட்டது:-

""முதன் முறையாக 

கல்முனை முஸ்லிம் பெண்

மற்றும் நால்வர் கடத்தல்.

கண்டணம் தெரிவித்து ஹர்த்தால்.""

  கல்முனையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் குடும்ப பெண் உட்பட நால்வர் ஆயுதம் தாங்கிய குழு ஒன்றினால் கடத்தப்பட்டனர்.
பிக்கப் வாகனம் ஒன்றுடன் கடத்தப்பட்ட இவர்கள் எங்கு இருக்கிறார்கள்இவர்களுக்கு என்ன நேர்ந்ததுஎன்று கடந்த இரு தினங்களாகத் தெரியவில்லை.

  இந்தக் கடத்தலைக் கண்டித்து கல்முனை முதல் பொத்துவில் வரையிலான மக்கள் நேற்று (1989.11.13)  ஹர்த்தால் மேற்கொண்டனர். அரச அலுவலகங்கள்அரச வங்கிகள்,பாடசாலைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன். போக்குவரத்துச் சேவைகள் முற்றாக முடங்கின.
இந்தச் சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:-
ஜனாப். எம்.எம். இஸ்ஸதீன் (கல்முனையில் பிரபல வர்த்தகர்) இவரது துணைவியார் ஜனாபா. இஸ்ஸதீன்ஜனாப். எம்..எம். சுபியான் (கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் ஆங்கில ஆசிரியர்)எம்.சி.எம். மன்சூர் (கல்முனை ஸாஹிறாக் கல்லூரி மாணவன்). இவர்கள் நால்வரும் கடந்த 11 ஆம் திகதி சனிக்கிழமை (1989.11.11)  காலை 10.30மணியளவில் தங்களது பிக்கப் வாகனமான 28 ஸ்ரீ 5340 இல் பண்டாரவளையிலிருந்து கல்முனை நோக்கிப் புறப்பட்டனர்.
அம்பாறையில் சிறிது ஓய்வு எடுத்து விட்டு சம்மாந்துறையை அண்மித்து வந்து கொண்டிருந்தனர். மல்வத்தைக்கும் பங்களாவெளிக்கும் இடையில் வயல் வெளியில் வைத்து ஆயுதம் தாங்கிய குழு ஒன்று இவர்களைக் கடத்தியது.
வரலாற்றில் ஒரு முஸ்லிம் பெண் இப்பகுதியில் கடத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதனால் முஸ்லிம் மக்கள் உட்பட தமிழ் மக்களும் பெரும் வேதனையும் ஆத்திரமும் அடைந்துள்ளனர்.
இப்பகுதி வர்த்தக சங்கங்கள்பிரஜைகள் குழுக்கள் பள்ளிவாசல்கள் நிர்வாகங்கள்பொது இயக்கங்கள் அனைத்தும் கடத்தப்பட்டவர்களை விடுவிக்கும்படி கோரிக்கைகள் விடுத்தும் இதுவரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை.
இக்கடத்தல் சம்பவத்தைக் கண்டித்து கல்முன சாய்ந்தமருது நிந்தவூர், அட்டாளைச்சேனைஒலுவில்அக்கரைப்பற்று சம்மாந்துறைபொத்துவில் ஆகிய பகுதிகளில் நேற்று 13 ஆம் திகதி திங்கள் கிழமை (1989.11.13) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனால் வன்முறை தலைதூக்கி விடுமோ என அஞ்சப்படுகின்றது.
கொழும்பிலுள்ள வர்த்தக,கப்பற்றுறை அமைச்சர் ஜ்னாப். .ஆர். மன்சூரின் கவனத்திற்கு இச்சம்பவம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து அவர் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சாம் தம்பிமுத்துவை இப்பிரதேசத்திற்கு அவசரமாக அனுப்பி வைத்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம்.அஷ்ரப்வடக்குகிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனாப். எஸ். நிஜாமுதீன் ஆகியோர் கல்முனைக்குச் சென்று கடத்தப்பட்ட நால்வரையும் விடுவிக்கும் முயற்சியில் நேற்று (1989.11.13) ஈடுபட்டிருந்தனர்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top