தாருஸ்ஸலாம் கட்டிட வருமானம் தொடர்பாக
மக்களுக்கு இதுவரையும் ஒரு தெளிவான விளக்கமில்லை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாம் கட்டிடம் மற்றும் அதனை அண்டியுள்ள கட்சிக்குச் சொந்தமான நிலம் தொடர்பாக சில விட்டுக்கொடுப்புக்களுடன் சமரசத்திற்கு வந்துள்ள போதிலும் இதுவரை கட்சியின் உயர்பீடத்திற்கு குறித்த கட்டிடத்தினால் கட்சிக்கு கிடைத்த வருமானம்,கிடைக்கவுள்ள வருமானம் தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி உயர்பீட உறுப்பினர்கள் சிலர் கட்சியின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்கள்.
குறிப்பிட்ட விடயம் தொடர்ந்தும் மூடி மறைக்கப்பட்டு வருவதாகவும் இதில் பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கடந்த மாதம் 7ம் திகதி நடைபெற் கட்சியின் பேராளர் மகாநாட்டிற்கு முன்பு இடம்பெறவுள்ள கட்டாய அதிஉயர்பீடக் கூட்டத்தில் இதனை சமர்பிக்குமாறும் செயலாளரிடம் கடிதமூலமும் கேட்டிருந்தனர். அல்லவா?
இது விடயம் தொடர்பாக மக்களுக்கு இதுவரையும் ஒரு தெளிவான விளக்கமில்லை.

தலைநகரில்  நிமிர்ந்து நிற்கின்ற (தாறுஸ்ஸலாம்) சாந்தி இல்லம் பற்றி மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் முன்றலில் 1998 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற  பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில்,

பல இன மக்களினதும் உழைப்பைக் கொண்டும்,
பண உதவிகளைக் கொண்டும் நிர்மாணிக்கப்பட்ட
(தாறுஸ்ஸலாம்) சாந்தி இல்லம்

பல இன மக்களினதும் ஐக்கியத்திற்காக தலைநகரில்  நிமிர்ந்து நிற்கின்ற (தாறுஸ்ஸலாம்) சாந்தி இல்லம் பல இன மக்களினதும் உழைப்பைக் கொண்டும், பண உதவிகளைக் கொண்டும் நிர்மாணிக்கப்பட்டதாகும். இந்த இல்லத்தை நிர்மாணிப்பதற்கு என ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கரணில் விக்கிரம்சிங்க, சிவசிதம்பரம் ஐயா, டக்ளஸ் தேவானந்தா போன்றோர் பண உதவி செய்திருக்கிறார்கள். ஏன் ஜப்பான் நாடு கூட பண உதவிகளைச் செய்திருக்கின்றது.இப்படிச் சொல்வதில் எனக்கு பெருமையாக இருக்கின்றது.
இவ்வாறு துறைமுகங்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.எம்.அஷ்ரஃப் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் முன்றலில் 1998 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் பேசுகையில் கூறினார்.
கல்முனை நீர் வழங்கல் திட்டம், சாய்ந்தமருது சிறுவர் பூங்கா என்பனவற்றை ஆரம்பித்து வைத்தும் சாய்ந்தமருது பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நடுதல், சாய்ந்தமருது ஐக்கிய விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நடுதல் ஆகிய வைபவங்களில் அமைச்சர் கலந்துவிட்டு இறுதியில் இப்பொதுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.
சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர் அல்ஹாஜ் எம்..எம்.மீராலெவ்வை தலைமை வகித்த இப் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் அஷ்ரஃபின் நீண்ட உரை அதிகாலை 2.00 மணி வரை நீடித்தது.
இக்கூட்டத்தில் தபால் தொலைத் தொடர்புகள் பிரதி அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எம்.முஸ்தபா, லத்தீப் சின்னலெவ்வை, றிஸ்வி சின்னலெவ்வை, கல்முனை பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்..மஜீட், சமய, கலாசார அமைச்சின் முஸ்லிம் திணைக்கள ஆலோசகர் எஸ்.எச்.எம்.ஜெமீல் ஆகியோரும் பேசினார்கள்.
-நன்றி வீரகேசரி  1998.11.26

இது தொடர்பில் உயர்பீட உறுப்பினர்களால் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை வாசகர்களின் பார்வைக்காக பதிவிடுகின்றோம்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top