41 வருடங்களுகு முன் இலங்கையில் இடம் பெற்ற விமான விபத்து...
182 ஹஜ் பயணிகளை ஏற்றிக் கொண்டு
மக்கா நோக்கி பயணித்த போது சம்பவம்
1974
ஆம் ஆண்டு, டிசெம்பர் மாதம் 4 ஆம் திகதி, இந்தோனேசியாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு
மக்கா நோக்கி பயணித்த Martin Air Dc 8 ரக விமானம், ஹட்டன், நோட்டன் ஏழுகன்னியர் மலையில்
மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம்
நடைபெற்று நேற்றுடன் 41 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இவ்விபத்தினால்,
விமானிகள் உட்பட 191 பேர் அதே இடத்தில் உடல்
சிதறி பலியாகினர். இவர்களில் 190 பேரின் உடல்கள்;, கொத்தலென கந்த என்று அழைக்கப்படும்
அவ்விடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டன.
ஓரளவு அடையாளம்
காணக்கூடியவாறு இருந்த விமான பணிப் பெண்ணின் உடலை, அவரின் காதலர் ஹெலிகொப்டர் மூலமாக
இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்றார்.
விமான
பாகங்களில் எஞ்சியிருக்கும் சில்லு ஒன்று மட்டும் இதுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
அந்த சில்லானது, இச்சம்பவத்தை நினைவுக்கூறும் வகையில், நோட்டன் விமலசுரேந்திர அணைக்கட்டுக்கு
செல்லும் வழியில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment