பல்கலைகழகங்களின் முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர்களுடன்
பிரதமர் ரணில்விக்ரமசிங்க - அமைச்சர் றிசாத் பதியுத்தீன் விசேட சந்திப்பு
கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்து கொடுத்த
அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு மாணவர்கள் நன்றி தெரிவிப்பு
இலங்கை
பல்கலைகழகங்களில் உள்ள முஸ்லிம் மஜ்லிஸ்
பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ரணில்
விக்ரமசிங்கவுக்கும் இடையிலான விசேட
கலந்துரையாடல் ஒன்று இன்று 5 ஆம் திகதி சனிக்கிழமை காலை நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்றது
அகில இலங்கை மக்கள் .காங்கிரஸ் .தேசிய
தலைவரும் அமைச்சருமான றிசாத்
பதியுத்தீனின் விசேட ஏற்பாட்டின் கீழ் அமைச்சரின் தலைமையில் இந்த
விசேட கலந்துரையாடல் ஒழுங்கு
செய்யபட்டிருந்தது
பல்கலைகழகங்களில்
கல்வி பயிலும்
முஸ்லிம் மாணவர்கள்
எதிர்நோக்கும் பிரச்சினைகள் தேவைப்பாடுகள் மற்றும் பொதுவாக
முஸ்லிம் சமூகத்தின்
கல்வி நிலை
தொடர்பில் விசேட
திட்டங்களை வகுக்கும் அடிப்படையிலேயே இக் கலந்துரையாடலை அமைச்சர் றிசாத் பதியுத்தீன் ஏற்பாடு செய்திருந்தார்
பிரதமர்
ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக
கலந்து கொண்ட
இந்த கலந்துரையாடலில் அமைச்சர்
நிரோசன் பெரேரா
பிரதியமைச்சர் ஹர்சடி சில்வா ஆகியோரும் கலந்து
கொண்டனர்
முஸ்லிம்
மஜ்லிஸ் பிரதிநிதிகள்
இக் கலந்துரையாடலின் போது
பிரதமரிடம் நேரடியாகவே தமது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து எடுத்துரைத்தனர்
மகாப்பொல
புலமைப்பரிசில் நிதியினை அடுத்த வருடம் முதல்
அதிகரிப்பதற்கு
பிரதமர் எடுத்த
நடவடிக்கைக்கு இக்
கலந்துரையாடலின் போது நன்றி தெரிவித்த
முஸ்லிம் மாணவர்கள்
இக் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு
செய்து கொடுத்த அமைச்சர்
றிசாத் பதியுதீனுக்கும்
தமது நன்றிகளை
தெரிவித்துகொண்டனர்.
0 comments:
Post a Comment