கடும் மழை வெள்ளம் காரணமாக
தமிழகத்தில் 500 பேர் பலி!
மக்கள் பால், காய்கறி, குடிநீர் போன்ற அத்யாவசிய பொருட்கள் கிடைக்காமல்
தவிப்பு
பலத்த மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டதால் தமிழகம் முழுவதும்
சுமார் 500 பேர் பலியாகி உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி
உள்ளன. பல
பேர் மாயமாகியுள்ளதால்
அவர்களை பற்றி
எந்த தகவலும்
கிடைக்காமல் உறவினர்கள் கண்ணீருடன் தேடி வருகின்றனர் எனவும்
அறிவிக்கப்படுகின்றது.
வடகிழக்கு
பருவமழை காரணமாக
தமிழகம் முழுவதும்
கடந்த ஒரு
மாதமாக மழை
பெய்து வருகிறது.
சென்னை, கடலூர்,
காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள்
கனமழைக்கு பெரிதும்
பாதிப்புக்கு உள்ளாகின எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கனமழையால்
தெருக்கள், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஆறுகள்,
ஏரிகள், குளங்கள்
நிரம்பின. பல
இடங்களில் ஏரிகள்
உடைந்து குடியிருப்புகளுக்குள்
புகுந்தது. இந்த மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது
சென்னை, கடலூர்,
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள். இங்கு வீடுகளை
வெள்ளம் அடித்து
சென்றதில் பலர்
உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்த நிலையில்,
கால்நடைகளும் உயிரிழந்தன என இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
சென்னையை
பொருத்தவரை இன்றும் மழை பெய்து வருவதால்,
மக்கள் தொடர்ந்து
சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். வேளச்சேரி, மடிப்பாக்கம், கோட்டூர்புரம்,
மணலி, மீஞ்சூர்,
துரைப்பாக்கம், அம்பத்தூர், மடிப்பாக்கம், ரெட் ஹில்ஸ்,
மணப்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, முடிச்சூர்,
தாம்பரம், பள்ளிக்கரணை
உள்ளிட்ட பகுதிகளில்
அதிகளவில் பாதிப்பு
ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்னும் பல இடங்களில்
வெள்ளநீர் வடியாமல்
உள்ளது. இதனால்
மக்கள் வீடுகளில்
சிக்கி தவித்து
வருகின்றனர் என்றும் அங்கிருந்து வரும்
செய்திகள் தெரிவிக்கின்றன.
அங்குள்ள மக்கள் பால், காய்கறி, குடிநீர்
போன்ற அத்யாவசிய
பொருட்கள் கிடைக்காமல்
தவித்து வருகின்றனர்.
கனமழை பெய்த
பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்தது, மின்சாரம்
தாக்கியது, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது ஆகியவற்றால்
உயரிழப்புகள் ஏற்பட்டது. கனமழைக்கு தமிழகத்தில் சுமார்
500 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில்
பல இடங்களில்
உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது. நந்தம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில்
ஏற்பட்ட மின்தடையால்,
வென்டிலேட்டர் செயல்படவில்லை. இதனால் 18 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம்
பெரும் அதிர்ச்சியை அங்கு ஏற்படுத்தியது.
ஆலந்தூரில்
உள்ள முன்னாள்
இராணுவ
வீரர் வீட்டில்
வெள்ளம் சூழ்ந்தது.
வீட்டில் இருந்தவர்கள்
அனைவரும் தப்பி
சென்று விட்டதாக
அப்பகுதி மக்கள்
நினைத்திருந்த நிலையில், வீட்டை விட்டு வெளியே
வரமுடியாமல் 3 பேரும் இறந்து கிடந்தனர். இந்த
சம்பவம் அப்பகுதியில்
பெரும் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கனமழையின்போது
வீடுகளை விட்டு
வெளியே சென்ற
சிலர் வீடு
திரும்பவில்லையாம். இதனால் அவர்களுடைய
குடும்பத்தினர் பெரிதும் சோகத்தில் உள்ளனராம். இதேபோல்
வெள்ளம் பாதித்த
பகுதிகளில் சிக்கிய சிலர் அங்கிருந்து
பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல புறப்பட்டபோது, காணாமல்
போன சோகமும்
நடந்துள்ளது. இதனால் அவர்களின் உறவினர்கள் கண்ணீருடன்
அவர்களை தேடி
வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு
வந்து பலர்,
தங்களது உறவினர்கள்
உள்ளனரா என
தேடி வருகிறார்கள் என மக்கள் சோகத்துடன்
தெரிவித்துள்ளனர்.
தொலைபேசி
சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளதால்
காணாமல் போன
உறவினர்களை பற்றி எந்த தகவலும் இல்லாமல்
பலர் தவித்து
வருகின்றனர். அவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம்
என சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் அவர்களின்
உறவினர்கள் பரிதவித்து வருகிறார்கள். குறிப்பாக சென்னை
புறநகர் மற்றும்
அடையாறு, கோட்டூர்புரம்
பகுதிகளில் வெள்ளம் பாதித்தவர்களில் பலர் அடுக்குமாடி
குடியிருப்பில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் சிலர்
மீட்கப்பட்டுள்ளனர். சிலரை பற்றி
தகவல் இல்லை
என உறவினர்கள்
கண்ணீர் மல்க
கூறியுள்ளனர்.
பலத்த மழை
காரணமாக ஏற்பட்ட
வெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்ட
உடல்கள் ஆங்காங்கே
மீட்கும் செய்திகள்
வந்தவண்ணம் உள்ளன. இதற்கிடையில் இன்று சென்னை
நந்தனம் ஒய்எம்சிஏ
மைதானத்தில் 2 பேரின் உடல்கள் கிடந்தது. அவர்கள்
யார் என
தெரியவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சென்னை
புறநகர் பகுதிகளில்
இன்னும் வெள்ளநீர்
வடியாததால், உயிரிழப்பு குறித்த முழுமையான தகவல்கள்
தெரியவில்லை. ஒரு பக்கம் உயிரிழப்பு, மற்றொரு
புறம் நிவாரணம்
கிடைக்காமல் பல இலட்சம் பேர்
தவித்து வருகின்றனராம்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு
போதிய உதவிகளை
செய்யாமல் அரசு
அலட்சியம் காட்டி
வருவதாக பொதுமக்கள்
குற்றம்சாட்டியும் வருகின்றனர் என்ற செய்தியும் வெளிவந்திருக்கிறது.
0 comments:
Post a Comment