முன்னாள் செனட்டர் மசூர் மௌலானா காலமானார்
Former Senotor Mashoor Moulana Passed away


தந்தை செல்வா தத்தெடுத்த தனயன்அரசியல் மேடைகளை தன் சிம்மக் குரலால் வென்றெடுத்த வீரன்தன் நேரிலாத் தேசியத் தலைவன்  முன்னாள் ஜனாதிபதி ஆர.பிரேமதாஸா அவர்களின் அன்புக்குரிய நண்பன்மருதமுனையின் இதயத்தில் வாழ் முன்னாள் செனட்டர் மசூர் மௌலானா தனது 83 ஆவது வயதில் இன்று 4 ஆம் திகதி திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் கொழும்பில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!!
மசூர்மௌலானா 31.01.1932ம் ஆண்டு செய்யது ஐதுறுஸ் மௌலானா செயின் மௌலானா,இஸ்மாலெப்பை போடியார் செயினம்பு தம்பதிக்கு மகனாக் மருதமுனையில் பிறந்தார்.
ஆரம்பக்கல்வியை அப்போதய மருதமுனை அல்மனார் மஹா வித்தியாலயத்தில் கற்றார்.1942 ஆண்டு ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரிட்சையில் (டென்ஹாம் புலமைப்பரிசில்)மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மூன்று மாணவர்களுள் முதலாவது மாணவராக தெரிவு செய்யப்பட்டார்.
ஆறாம் வகுப்புத் தொடக்கம் உயர்தர வகுப்பு வரை மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலும், மட்டக்களப்பு மத்திய கல்லூரியிலும் ஆங்கில மொழியின் மூலம் கல்வி கற்றார்.அங்கு நடைபெற்ற சிரேஷ்ட தராதரப்பத்திர பரீட்சையில் முதல் மாணவனாக தேறினார்.
பின்னர் அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற தமிழ் பேச்சுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று மருதமுனை மண்ணுக்கு புகழ் சேர்த்தார்.
இவர் தனது 17 வயதில் தந்தை செல்வநாயகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்அரசுக் கட்சியில் இணைந்து அரசியல் மேடைகளில் பிரச்சாரம் செய்தார்.1956ம் ஆண்டு தந்தை செல்வா தலைமையில் நடைபெற்ற ஸ்ரீ எதிர்ப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பனாகொட முகாமில் ஆறு மாதங்கள் சிறையில் இருந்தார்.
அதன் பின்னர் 1960ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழரசு கட்சி சார்பாக கல்முனைத் தொகுதியில் போட்டியிட்டு 119 வாக்குகளால் எம்.எஸ்.காரியப்பரிடம் தோல்வியடைந்தார்.
.தமிழ்,முஸ்லிம் மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டு குரல் கொடுத்தவர் தமிழ்,முஸ்லிம் நல்லுறவுக்கா பாடுபட்டவர் தமிழ் ஈழப்போராட்டத்தை மதித்தவர் விடுதலைப் புலிகளின் நியாயமான கோரிக்கைகளை வரவேற்றவர் எப்போதும் தமிழ் அரசியல் தலைமைகளுடன் நல்லுறவைப் பேணி வந்தவர்.
புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் புலிகளின் தளத்தில் இடம் பெற்ற சமாதானப் பேச்சு வார்த்தைகளின் போது முஸலிம் காங்கிரஸின் பிரதி நிதிகளில் ஒருவராக பங்கேற்று தனது கருத்துக்ளை தைரியமாக முன்வைத்தவர்.
1966ம் ஆண்டு மருதமுனை மக்களின் ஏகோபித்த தரவுடன் ரைவாகு வடக்கு கிராம சபையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.அன்று தொடக்கம் 1974ம் ஆண்டு வரை தலைவராக கடமையாற்றினார்.
அக்காலப் பகுதியில் அப்போதய அரசாங்கத்தின் அரசியல் வாதிகளின் எதிர்ப்புக்கும் மத்தியில் (1968.69) இருளில் மூழ்கிக்கிடந்த மருதமுனை கிராமத்திற்கு மின்சாரத்தைக் கொண்டு வந்து ஒளியூட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன மற்றும் ஆர்.பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் ஹோட்டல் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் வடக்கு- கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் பின்னர் 2009-2011 காலப்பகுதியில் கல்முனை மாநகர மேயராகவும்,1987-1991 காலப் பகுதியில் இந்தியாவின் தமிழ் நாட்டுக்கான உதவித் தூதவராகவும் கடமையாற்றியுள்ளர்.

மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் அழைப்பில் 1993 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார். மசூர் மௌலானா அவர்கள் மனைவி விஷ்ரத்துல் நயீமா இவர்களுக்கு ஐந்து ஆண் பிள்ளைகளும் ஒரு பெண்பிள்ளையும் உள்ளனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top