முஸ்லிம்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க கூடாது
டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்து
புளோரிடா மாநிலத்துக்குள் அவர் நுழைய அம்மாநில மேயர் தடை



அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைய அனுமதிக்கக் கூடாது என குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்து அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பை குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்துள்ளதாக அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்ட்டகான் கவலை வெளியிட்டுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைகளை உடையவரான டொனால்ட் ட்ரம்ப், தான் செல்லும் இடம் எங்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வருகிறார். பாரிஸ் தாக்குதலுக்கு பிறகு, அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரையும் கணக்கெடுத்து, ‘தாங்கள் இஸ்லாமியர்கள்என பிறருக்கு புரியும் வகையில் அடையாள அட்டை ஒன்றை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், அண்மையில் இஸ்லாமியர்களை அனுமதிப்பதில் உள்ள அபாயத்தைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ளும் வரை அமெரிக்காவில் நுழைய இஸ்லாமியர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகைக்கு கோரிக்கை விடுத்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பினார். இதற்கு குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். புளோரிடா மாநிலத்துக்குள் டொனால்ட் ட்ரம்ப்  நுழைய அம்மாநில மேயர் தடை விதித்துள்ளார்.
 இதே போல், கடந்த திங்கள் அன்று செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகர மேயரும் அவருக்கு தடை விதித்தார். இது குறித்து அவர் ட்விட்டரில், “ட்ரம்பின் உரைகளில் உள்ள அபாயத்தை முழுமையாக புரிந்து கொள்ளும் வரை அவர் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குள் நுழைய தடை விதிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, டொனால்டின் சர்ச்சைக் கருத்துக்கு பதிலளித்துள்ள வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் எர்னஸ்ட், “இப்போது செய்ததைத்தான், டொனால்ட் தனது பிரச்சாரம் முழுவதும் செய்து வருகிறார். இதன் மூலமாக, மக்களின் பயத்தோடு விளையாடி, தனது பிரச்சாரத்திற்கு வலுசேர்த்து வருகிறார். மிகவும் கீழ்த்தரமான வழியில் அமெரிக்காவை பிரிக்க நினைக்கிறார். இது அமெரிக்காவின் இறையாண்மைக்கே எதிரானதாகும்.” என்று தெரிவித்திருந்தார்.
இஸ்லாமியர்களுடன் நெருக்கம்காட்ட முயற்சிக்கும் அமெரிக்க அரசின் முயற்சிக்கு டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த கருத்து பின்னடைவை ஏற்படுத்தும் என அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை செயலாளர் ஜே ஜான்சன் குறிப்பிட்டிருந்தார். இதுமட்டுமின்றி, உலகம் முழுவதும் இருந்து டொனால்ட் ட்ரம்ப்-புக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைய அனுமதிக்கக் கூடாது என குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்து அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பை குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்துள்ளதாக அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்ட்டகான் கவலை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பென்ட்டகான் செய்தி தொடர்பாளர் பீட்டர் குக் கூறியதாவது:-
இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த மக்களின் ஒத்துழைப்புடன் .எஸ். தீவிரவாதிகளை அழித்தொழிக்கும் வேட்டையில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படைகளில் முஸ்லிம் வீரர்களும் உள்ளனர்.
அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைய அனுமதிக்கக் கூடாது என கூறும் கருத்துகள், .எஸ். தீவிரவாதிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பலம்சேர்க்கும் வகையிலும் அமெரிக்காவை இஸ்லாமியர்களுக்கு எதிரான நாடாக சித்தரிக்கும் விதத்திலும் நமது நாட்டின் மதிப்புக்கு மட்டுமின்றி, உள்நாட்டு பாதுகாப்புக்கும் பாதகமாகவும் அமைந்துவிடும்.
அமெரிக்க முப்படைகளில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் நாட்டுப்பற்றுடன் கடமையாற்றி வருகின்றனர். எனினும், உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையிட நான் விரும்பவில்லை. ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட இடங்களில் .எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் போரில் ஈடுபட்டுள்ள உள்நாட்டுப் படைகளுக்கு உதவி செய்வதில் மட்டுமே பென்ட்டகான் கவனம் செலுத்தி வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவில் சுமார் 30 லட்சம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்நாட்டின் மக்கள் தொகையில் இந்த எண்ணிக்கை ஒரு சதவீதத்துக்கும் குறைவானதாகும். சமீபத்தில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட ஒரு புள்ளிவிபரத்தின்படி, களங்களில் உள்ள 3,817 வீரர், வீராங்கனைகளும், தேசிய பாதுகாப்பு மற்றும் தயார்நிலை காத்திருப்பில் உள்ள (ரிசர்வ்) 2,079 வீரர், வீராங்கனைகளும் என மொத்தம் 5,896 முஸ்லிம்கள் அந்நாட்டின் முப்படைகளில் பணியாற்றி வருவதாக தெரியவந்துள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top