வசீம் தாஜுதீனின்  கொலைசம்பவங்கள்

CCTV காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்


2012ம் ஆண்டு பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலான சில CCTV காணொளிக் காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இதனால் அழிக்கப்பட்டுள்ள தகவல்களை மீளப்பெற்றுக் கொள்ள பொலிஸார், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உதவியை நாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் கிடைக்கப்பெற்றுள்ள சில காணொளிகளை உறுதி செய்து கொள்ளவும், அக் காணொளிகள் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொலை தொடர்பில் அப்போது பொலிஸார் கிரமமான விசாரணைகள் எதனையும் நடத்தியிருக்கவில்லை எனவும் இதனால் தற்போது விசாரகைளை முன்னெடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கொழும்பு நகரின் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டி.வி காட்சிகள் மூன்றாண்டு காலம் வரையில் வைத்திருக்கப்படாது எனவும், குறுகிய காலத்தில் காட்சிகள் அழிக்கப்பட்டுவிடுமெனவும் பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதிவாகியுள்ள காணொளிகளை மீட்டெடுத்து விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top