பாதையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில்
வாகனத்துடன்
சிக்கிய குடும்பம்!
பெரு
நாட்டில் திடீரென பாதையில் ஏற்பட்ட பள்ளத்தில் வாகனம் ஒன்று சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
தென்
அமெரிக்க நாடான பெருவின் Trujillo பகுதியில்
உள்ள பாதையில் வாகனங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தன.
அப்போது
அந்த பாதையில் திடீரென்று பெரும் பள்ளம் ஒன்று ஏற்பட்டு அந்த நேரத்தில் கடந்து சென்ற
வாகனம் ஒன்று அதில் சிக்கியுள்ளது.
16
அடி ஆழம் கொண்ட அந்த பள்ளத்தில் விழுந்த வாகனத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில்
அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.
பள்ளத்தில்
விழுந்த அந்த வாகனத்தில் இருந்து 2 வயது சிறுமி உட்பட 3 நபர்களை அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர்.
கடந்த
வாரம் அப்பகுதியில் அடித்த கன மழை காரணமாக பாதையில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.
பள்ளத்தில்
வாகனத்துடன் சிக்கிய குடும்பத்தினரை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.



0 comments:
Post a Comment