நாடாளுமன்ற
உறுப்பினர் பதவிப் பிரமாணத்துக்கு
காத்திருக்கும் பொன்சேகா!
ஐக்கிய
தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாளை பதவிப்பிரமாணம் செய்து
கொள்ள சரத்பொன்சேகா முழுமையான தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.
புதிய
ஆடைகள் கொள்வனவு, உறவினர்களை நாடாளுமன்றம் அழைத்துச் செல்வதற்கான விசேட அனுமதி பெறல்
என்று அவர் தீவிரமாக தனது பணிகளை முன்னெடுத்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
இதற்கிடையே
இன்று கூடும் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுவின் அனுமதி கிடைத்தவுடன் சரத்
பொன்சேகாவை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலும்
தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று நள்ளிரவு குறித்த வர்த்தமானி
அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.
சரத்
பொன்சேகாவை தேசியப்பட்டியல் ஊடாக நியமிப்பதற்கான அங்கீகாரம் கிடைத்தவுடன், இன்று மாலையே
அதனை தேர்தல் ஆணையாளருக்கும், அரசாங்க அச்சகத்துக்கும் அறிவிக்க ஐ.தே.க. வில் உள்ள
சரத் பொன்சேகாவின் நண்பர்களான முக்கிய அமைச்சர்கள் பலர் உஷார் நிலையில் உள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment