யுவன் ஷங்கர் ராஜா – ஜபறுன்னிஸா
தம்பதியினருக்குப் பெண் குழந்தை!
இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்ட இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்குப் (அப்துல் ஹாலிக்) பெண் குழந்தை பிறந்துள்ளது.
யுவனுக்கும் ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த ஜபறுன்னிஸாவுக்கும் கடந்த வருடம் ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று யுவன் ஷங்கர் ராஜாவுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம் என ட்விட்டரில் தகவல் தெரிவித்தார் யுவன்.
இளையராஜாவின் மனைவியும் யுவனின் தாயுமான ஜீவா சிலவருடங்களுக்கு முன்பு காலமானார். அவருடைய பிறந்தநாளன்று யுவனுக்கு இக் குழந்தை பிறந்துள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு
மாறி ஜபறுன்னிஸாவை 3 ஆவது திருமணம் செய்து
கொண்டார்.
யுவனுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த பாடகி சுஜாயாவை
காதலித்து மணந்து கொண்டார். ஆனால் இவர்களது திருமணம் 3 ஆண்டுகள்தான் நீடித்தது. 2008ல்
விவாகரத்துப் பெற்று இருவரும் பிரிந்து கொண்டனர்.
இதனையடுத்து 2011 ஆம் ஆண்டு ஷில்பா என்பவரை இரண்டாவது திருமணம்
செய்து கொண்டார். அந்த திருமணமும் நீடிக்கவில்லை.
0 comments:
Post a Comment