உலகிலேயே அதிக எடையுள்ள
10 வயது இந்தோனேசிய சிறுவன்
இந்தோனேசியாவின்
மேற்கு ஜாவா
மாகாணத்தை சேர்ந்தவன்
சூர்ய பெர்மானா.
தற்போது 10 வயதாகும் இச்சிறுவனின் எடை 192 கிலோ.
உடல்
பருமன் காரணமாக
இவனால் நடக்க
முடியவில்லை. அதனால் பள்ளிக்கும் செல்ல முடியவில்லை.
தினமும் 5 வேளை
சாப்பிடுகிறான். அரிசி மற்றும் மாட்டிறைச்சி சூப்
போன்ற உணவுகளையே
உண்கிறான்.
இவனால்
ஆடைகளை அணிய
முடியவில்லை. 2 பேர் சாப்பிடும் உணவை இவன்
ஒருவனே சாப்பிடுகிறான்.
தினமும் பெரிய
தண்ணீர் தொட்டியில்
4 மணி நேரம்
குளிக்கிறான்.
பிறக்கும்
போது 3.2 கிலோ
எடைதான் இருந்தான்.
அவனால் பசியை
கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் அதிக அளவில்
சாப்பிட்டு குண்டாகி விட்டான். அவனது எடையை
குறைக்க முடியவில்லை.
விவசாய தொழில்
செய்வதால் பெரிய
ஆஸ்பத்திக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க
முடியவில்லை என சிறுவன் பெர்மானாவின் தாயார்
தெரிவித்துள்ளார். தற்போது உலகிலேயே
அதிக எடையுள்ள
சிறுவன் என
இவன் அறிவிக்கப்பட்டிருக்கிறான்.
0 comments:
Post a Comment