டாக்காவில்
கடத்தப்பட்ட 20 வெளிநாட்டினர் கொலை
கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்தது
வங்கதேசத்
தலைநகர் டாக்காவில்,
உணவு விடுதியில்
பிணைக் கைதிகளாக
வைக்கப்பட்டிருந்த 20 வெளிநாட்டினரையும் கடத்தல்காரர்கள் கொலை செய்ததை அடுத்து,
கடத்தல்காரர்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
வங்கதேசத்
தலைநகர் டாக்காவில்
உள்ள உணவகத்தில்
வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கிகளுடன் புகுந்த மர்ம
நபர்கள் 6 பேர்,
அங்கிருந்த வெளிநாட்டினரை பிணைக் கைதிகளாக பிடித்து
வைத்தனர்.
தகவல்
கிடைத்த உடன்,
அந்த உணவு
விடுதியை சுற்றி
வளைத்த பொலிஸார்
மற்றும் பாதுகாப்புப்
படையினருடன் கடத்தல்கார்கள் நடத்திய துப்பாக்கிச் சண்டையில்
6 பிணைக் கைதிகள்
பலியாகினர்.
இந்த
நிலையில், வெளிநாட்டு
பயணிகள் உட்பட
13 பேர் பத்திரமாக
மீட்கப்பட்டனர். அதில் இரு இலங்கையர்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்த நிலையில்
இன்று காலை,
கடத்தல்காரர்கள் பிணைக் கைதிகள் 20 பேரையும் சுட்டுக்
கொன்றனர். இதையடுத்து
விடுதிக்குள் நுழைந்த ராணுவத்தினர், கடத்தல்காரர்களை சுட்டுக்
கொன்றனர்.
உயிரிழந்த
வெளிநாட்டினரில் ஜப்பானியர்களும், இத்தாலியர்களும்
அடங்குவர்.
இறந்தவர்களில் பெரும்பாலானவர்களின் கழுத்துகளை அறுத்து கொடூரமான முறையில் தீவிரவாதிகள் கொன்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..
0 comments:
Post a Comment