துருக்கி ராணுவ புரட்சியில் 42
பேர் பலி
துருக்கியில் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் அங்கு பெரும் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் நடத்திய போராட்டம், வன்முறையால் இதுவரை 42 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 17 பேர் பொலிஸார் எனவும், மற்றவர்கள் பொது மக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்காராவில் பார்லி., கட்டிடம் அருகே இரண்டு இடங்களில் வெடிகுண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருவதால் துருக்கியில் உள்ள முக்கிய விமான நிலையமான இஸ்தான்புல் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment