நிஸ் நகரில் லாரியை ஓட்டி வந்து தாக்குதல் நடத்திய
நபரின் அடையாளம் தெரிந்துள்ளதாக
தெரிவிப்பு
பிரான்ஸ் நாட்டில் உள்ள நிஸ் நகரில் கன்டெய்னர் லாரியை வேகமாக ஓட்டி வந்து கூட்டத்தினர் மீது ஏற்றி ஏராளமானவர்களை கொன்ற நபர் யார் என்று அடையாளம் தெரிந்து உள்ளது.
பிரான்ஸில் வசித்து வந்த அவர் துனீஷியா நாட்டில் உள்ள சகேன் நகரத்தை பூர்வீகமாக கொண்டவர். 31 வயதான அவரது பெயர் முகம்மது லாகோயேஜ் பவுலெல் என்றும், திருமணமான அவருக்கு 3 குழந்தைகள் இருப்பதாகவும் பிரான்ஸ்பொலிஸ் தரப்பில் கூறியதாக துனீஷியா பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
4 ஆண்டுகளுக்கு முன் முகம்மது லாகோயேஜ் பவுலெல் தனது சொந்த ஊருக்கு வந்து சென்றதாக தகவல் கிடைத்து இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக முகம்மது லாகோயேஜ் பவுலெல்லின் முன்னாள் மனைவியிடம் பிரான்ஸ்பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 comments:
Post a Comment