75 வயதை கடந்தவர்களுக்கு அமைச்சர் பதவி கிடையாது
இந்திய மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா ராஜினாமா
இந்திய மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, ராஜினாமா செய்துள்ளார்.
இவர், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவரது பதவி விலகலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி மாளிகை தெரிவித்தது.
நஜ்மா ஹெப்துல்லா, 75 வயதை கடந்தவர். 75 வயதை கடந்தவர்களுக்கு அமைச்சர் பதவி கிடையாது என்ற நிலைப்பாட்டை பிரதமர் மோடி கடைபிடிப்பதாக கூறப்படுகிறது.
அதனால், கடந்த
5-ந் திகதி மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது, நஜ்மா ஹெப்துல்லா பதவி விலகுமாறு கோரப்பட்டது. அவர் அப்போது வெளிநாடு சென்றிருந்ததால், நேற்று பதவி விலகினார்.
நஜ்மா ஹெப்துல்லா ராஜினாமா காரணமாக, அவர் கவனித்து வந்த சிறுபான்மையினர் நல இலாகா,
அந்த துறையின் இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவர் தனிப்பொறுப்புடன் அந்த இலாகாவை கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment