காஷ்மீரில்
பிரிவினைவாதிகள் வன்முறை:
துப்பாக்கி
சூட்டில் 8 பேர் பலி; 100 பேர் காயம்
காஷ்மீரில்
பிரிவினைவாதிகள் ஏற்படுத்திய வன்முறையில் 8 பேர் உயிரிழந்தனர்.
100 பேர் காயமடைந்தனர்.
காஷ்மீரின் பல பகுதிகளில் ரயில் மற்றும்
சாலை போக்குவரத்து
துண்டிக்கப்பட்டுள்ளது. பதற்றம் காரணமாக
இணையதளம், செல்போன்
சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
அரசு அலுவலகங்கள்,
போலீஸ் நிலையங்களை வன்முறையாளர்கள் சூறையாடினர்.
இதனால் மாநிலத்தின்
பல பகுதிகளிலும்
இயல்பு வாழ்க்கை
பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல்
முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் கமாண்டர்
உட்பட 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால்
நேற்று சுட்டுக்
கொல்லப்பட்டனர்.
தீவிரவாதியின்
இறுதி ஊர்வலம்
இன்று நடந்தது.
தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை
கண்டித்து சயீத்
அலி கிலானி,
மிர்வாய்ஸ் உமர் பரூக் உள்ளிட்ட பிரிவினைவாத
தலைவர்கள் முழு
அடைப்பிற்கு அழைப்பு விடுத்து இருந்தனர். தீவிரவாத
தலைவர் கொல்லப்பட்டதற்கு
எதிர்ப்பு தெரிவித்து
காஷ்மீரின் பல பகுதிகளில் ஊர்வலம் நடந்தது.
பிரிவினைவாதிகள்
நடத்திய ஊர்வலத்தில்
கலவரம் வெடித்தது.
பாதுகாப்பு படையினர் மீ்து ஆர்ப்பட்டகாரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். ராணுவ
முகாம்களை முற்றுகையிட்டு
வன்முறையில் ஈடுப்பட்டனர்.
ஸ்ரீநகர்
மட்டுமல்லாது தெற்கு காஷ்மீரில் பல பகுதிகளிலும்
வன்முறை பரவியது.வன்முறையை கட்டுப்படுத்த
ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில்
ஆர்ப்பாட்டகாரர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.
100 பேர் காயமடைந்தனர்.
பலி எண்ணிக்கை
மேலும் உயரும்
என கூறப்படுகிறது.
அப்பகுதியில்
பதற்றம் நிலவுவதால்
ஊரடங்கு உத்தரவு
அமுலில் உள்ளது. மேலும்,
பாதுகாப்பு காரணங்களுக்காக இணையதளம், செல்போன் சேவைகள்
முடக்கப்பட்டுள்ளன. பதற்றம் காரணமாக அமர்நாத்
யாத்திரை தற்காலிகமாக
நிறுத்தப்பட்டுள்ளது. பாரமுல்லா பகுதியில் ரயில்
சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் சாலை
போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த
6 துணை ராணுவப்
படைகள் அனுப்பப்பட்டுள்ளன.





0 comments:
Post a Comment