அரசியலுக்குள்
காலடி எடுத்து வைக்கவுள்ள
விமுக்தி
குமாரதுங்க
முன்னாள்
ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்கவின்
புதல்வர் விமுக்தி
குமாரதுங்க விரைவில் அரசியல் வாழ்க்கையில் காலடி
எடுத்து வைக்கவுள்ளதாக
அரசியல் வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
தற்போது
வெளிநாட்டில் வசிக்கும் இவர் மிக விரைவில்
நாடு திரும்பவுள்ளதாகவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன்,
அவர் இலங்கை
வந்து தங்குவதற்கு
முதல் ஹொரகொல்லயில்
உள்ள வீடானது
துரித கதியில்
புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் அரசியல்
வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே,
மீண்டும் ஒரு
முறை பண்டநாயக்கவின்
குடும்பம் அரசியலுக்குள்
பிரவேசிப்பது உறுதியாகியுள்ளதாகவும் நம்பத்
தகுந்த வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.

0 comments:
Post a Comment