பொது மக்கள் மத்தியில் புகுந்த லொறி!

80  பேர் பலி 50 க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம்

பிரான்ஸில் Bastille Day கொண்டாட்டத்தின் போது இடம்பெற்ற விபத்தில் சுமார் 80  பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 பேர் பலத்தகாயமடைந்திருப்பதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.
லொறி ஒன்று மக்கள் கூட்டத்தில் புகுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த சம்பவம் பிரான்ஸ் நாட்டின், நைஸ் நகரில் இடம்பெற்றுள்ளது.
மக்கள் அனைவரும் ஆரவாரத்துடன், Bastille Day கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது யாரும் எதிர்பாராத விதமாக வேகமாக வந்த லொறி ஒன்று அங்கிருந்த மக்கள் கூட்டத்தில் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், சுமார் 80 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, 50 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் துப்பாக்சூடு சம்பவம் நடைபெற்றதாகவும், இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் ஒன்றும் வெளியாகியுள்ளன.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் துப்பாக்கிசூடு சத்தம் கேட்டது, அதன் பின்னரே லொறி மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நைஸ் நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top