உலகின் ஒரே வெறுமையான  
மத்தள சர்வதேச  விமான நிலையம் விற்பனைக்கு!

மத்தல ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை செய்ய முடியும் என அசராங்கம் அறிவித்துள்ளது.
இந்த விமான நிலையம் இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தினசரி இரண்டு விமானங்களே தற்போது இந்த விமான நிலையத்தில் சேவையில் ஈடுபட்டுள்ளன.
2013ஆம் ஆண்டு இந்த விமான நிலையம் திறக்கப்பட்டதை அடுத்து, இலங்கையின் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைப்பே சீராக்கி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை அமைப்பதற்காக சீனாவிடம் கடனாக பெற்றுக் கொண்ட 190 மில்லியன் டொலரை திருப்பி செலுத்த போதுமான வருவாய் தற்போது இல்லை.
இருப்பினும் இந்த விமான நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12 வரையில் திறந்து வைக்கப்படும் எனவும் அதன் பின்னர், முதலீடுகளின் அடிப்படையில் விமான நிலையம் இயங்க வைக்கப்படும் எனவும் தெரியவருகிறது. குறித்த விமானம் சீனாவின் உதவியுடனேயே செயற்பட்டு வந்துள்ளது.
மத்தல விமான நிலையம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது அது மட்டுமன்றி கொழும்பில் இருந்து 250 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் மத்தல விமான நிலையம் அமைக்கப்பட்டது.
முன்னதாக 2014ஆம் ஆண்டு 3,000 விமானங்கள் சேவையில் ஈடுப்பட்டிருந்ததாகவும், 21 ஆயிரம் பயணிகள் பயணித்ததாகவும் தற்போது ஒரு விமானத்தில் ஏழு பயணிகளே பயணிக்கின்றார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உலகின் வெறுமையான ஒரே விமான நிலையமாக மத்தள விமான நிலையம் காணப்படுவதாக போர்ப்ஸ் சஞ்சிகையின் விபரணக் கட்டுரையொன்று தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்க காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதும் உலகின் பாரிய விமானங்கள் எல்லாம் வந்து போகும் என்று வர்ணிக்கப்பட்டதுமான மத்தள விமானநிலையம் பற்றி போர்ப்ஸ் சஞ்சிகை அண்மையில் கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டுரையை எழுத்தாளர் வேட் ஷெபர்ட் எழுதியுள்ளார்.
அவர் தனது கட்டுரையில் மத்தள விமான நிலையம் தொடர்பாக குறிப்பிடும்போது '' நான் அங்கு உள்ளே நுழைந்த பின் என்னைத் தவிர எந்தவொரு பயணியையும் நான் காணவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் கட்டுரையில் அழகான முறையில் வடிவமைக்கப்பட்ட கட்டிடம் என்பதற்காகவே அதனைப் பார்வையிட பலர் வருவதாகவும் அதனைத் தவிர உலகின் வெறுமையான ஒரே விமான நிலையம் மத்தள விமான நிலையம் தான் என தெரிவித்துள்ளார்.
உலகின் பெரும்பாலான விமான நிலையங்களில் காணப்படும் அதிநவீன வசதிகள் பல காணப்பட்ட போதும் திட்டமிடப்பட்ட  முறையில் மேற்கொள்ளப்படாத அபிவிருத்தி நடவடிக்கையே மக்கள் அங்கு செல்லாமல் இருப்பதற்கான காரணம் என மேலும் அவர் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்

தற்போது இந்த விமான நிலையத்திற்கு அதிக விமானங்கள் வந்து செல்வதே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top