மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து
மாலத்தீவு வெளியுறவு துறை பெண் மந்திரி ராஜினாமா
மரண
தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலத்தீவு வெளியுறவு
துறை பெண்
மந்திரி பதவியை
ராஜினாமா செய்தார்.
மாலத்தீவு
நாட்டின் வெளியுறவு
துறை பெண்
மந்திரி துன்யா
மயூமூன் (43) இவர் அந்த நாட்டு ஜனாதிபதி அப்துல்லா
யாமீனி நெருங்கிய
உறவினர். இவர்
தனது பதவியை
ராஜினாமா செய்வதாக
திடீரென அறிவித்தார்.
ஜனாதிபதி அப்துல்லா
யாமீன் தலைமையிலான
அரசு சமீபத்தில்
மரண தண்டனை
விதிக்கும் சட்டத்தை கொண்டு வந்தது.
அதில்
தனக்கு உடன்பாடு
இல்லை என
கூறி பதவியை
ராஜினாமா செய்துள்ளளார்.
3 லட்சத்து 40 ஆயிரம் சன்னி முஸ்லிம்கள் உள்ள
இந்தநாட்டில் 60 ஆண்டுகளாக மரண தண்டனை சட்டம்
நடைமுறையில் இல்லை. தற்போது இதை கொண்டு
வர வேண்டிய
அவசியம் என்ன?
என கேள்வி
எழுப்பியுள்ளார்.
அவரையும்
சேர்த்து அப்துல்லா
யாமீனின் அரசில்
இருந்து இதுவரை
2 மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர். ஜனாதிபதி அப்துல்லா
யாமீனுக்கும், துன்யாவின் தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மயூமூன்
அப்துல் கயூமுக்கும்
இடையே ஏற்பட்ட
பிளவு காரணமாக
பதவியை ராஜினாமா
செய்தார் என்றும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment