ஒலுவில் வெளிச்ச வீட்டு வீதியில்
இரண்டு மோட்டார் பைசிக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
ஒருவா் ஸ்தலத்திலேயே பலி
இரண்டு
மோட்டார் பைசிக்கிள்கள் நேருக்கு
நேர் மோதியதில்
ஒருவர் அந்த இடத்திலேயே பலியானார்.
இந்த சம்பவம் ஒலுவில்
வெளிச்ச வீட்டு வீதியில் இன்று
2016.07.06 ஆம் திகதி புதன் கிழமை பி.ப.1.30 மணியளவில்
இடம்பெற்றது.
இச்சம்பவம்
பற்றி தெரியவருவதாவது,
ஒலுவில்
வெளிச்ச வீட்டு
வீதியில் ஒலுவிலை
நோக்கி வந்து
கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் பாலமுனையை
நோக்கிச் சென்று
கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு
நேர் ஒன்றுடன்
ஒன்று மோதியதில்
ஒலுவில் அஸ்ரப்
நகரைச் சேர்ந்த
அகமட்லெவ்வை முகம்மட் அசாருத்தீன் (வயது -22) என்பவர்
அந்த இடத்திலேயே
பலியானார்
இவருடன்
பிரயாணம் செய்த
ஒலுவில் வெளிச்ச
வீட்டு வீதியைச்
சேர்ந்த அப்துல்
றபீக் சனூஸ்
( வயது -22) என்பவர் மிகவும் ஆபத்தான நிலையில்
ஓலுவில் மாவட்ட
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக
சிகிச்சைக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்குக்
கொண்டு செல்லப்பட்டார்.
இவர்களுடன்
மோதிய பாலமுனையை
நோக்கிக் சென்றுகொண்டிருந்த
மோட்டார் சைக்கிளில் வந்த
இருவரும் சிறுகாயங்களுடன்
அவ்விடத்தை விட்டு தப்பியோடிவிட்டதாகவும்
தெரிவருகின்றது.
மேலதிக
புலன்விசாரனைகளை அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment