தமிழகத்தில் நாளை வியாழக்கிழமை
நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும்
தலைமை காஜி அறிவிப்பு
தலைமை காஜி முஹம்மது சலாவுதீன் அயூப் கூறியிருப்பதாவது:-
தமிழகம் மற்றும் பிறமாநிலங்களில் ஷவ்வால் மாதத்தின் தலைபிறை தென்படாததால் நாளை 7 ஆம் திகதி . வியாழக்கிழமை புனித நோன்புப் பெருநாள்கொண்டாடப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறியிருக்கிறார்.
தமிழக அரசும் ஏற்கனவே 7 ஆம் திகதியை ரமழான் விடுமுறை தினமாக அறிவித்து இருந்தது. அதன்படி நாளை (வியாழக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் ரமழான் புனித நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
இதேவேளை, இலங்கையில் ஷவ்வால் மாதத்தின் தலைபிறை நேற்று 5 ஆம் திகதி மாலை தென்பட்டதை அடுத்து புனித நோன்புப் பெருநாளை இன்று 6 ஆம் திகதி கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு அறிவித்திருந்தது.
0 comments:
Post a Comment