எரித்து கொலை செய்யப்பட்ட கர்ப்பமாக இருந்த இளம் பெண்
நீதி கேட்டு போராடும் அப்பாவித் தந்தை
ஆப்கானிஸ்தானில் கர்ப்பமாக இருந்த இளம் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு போராடி வருகிறார் அந்த பெண்ணின் தந்தை
ஆப்கானின் கோர் மாகாணத்தில் குடியிருந்து வருகிறார் முஹம்மது அஜாம் என்பவர் தமது 14 வயது மகள் சாரா என்பவரை அருகில் உள்ள ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
அந்த குடும்பத்தினர் அஜாமிடம் இருந்து கடனாக அதிக பணம் கைப்பற்றியிருந்ததால், அவர்களின் சகோதரி ஒருவரை அஜாமுக்கு திருமணம் செய்து வைக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதனிடையே அதிக பணம் தருவதாக வேறொரு நபர் அவர்களிடம் வாக்கு அளித்ததால் அந்த பெண்ணை பணம் அதிகம் தரும் நபருக்கு மணம் முடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில் குறிப்பிட்ட பெண்மணி முஹம்மது அஜாமுடன் தலைமறைவாகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த குடும்பத்தினர் சாரா மீது தங்கள் கோபத்தை காட்டியுள்ளனர்.
கர்பமாகியிருந்த அவரை கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர். பின்னர் நெருப்பு வைத்து சாராவை எரித்து கொலை செய்ய முயன்றுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அந்த இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் காபூல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற அஜாம் தமது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி காபூல் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
.
0 comments:
Post a Comment