தென் கொரியாவில் பிரதமரின் வாகனம் மீது
முட்டைகளை வீசி தாக்கிய பொதுமக்கள்

வடகொரியாவை அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரிய அரசு நவீனமாக்கப்பட்ட ஏவுகணை திட்டத்தை அமெரிக்க உதவியுடன் சியாங்ஜூ பகுதியில் அமைக்கப்பட உள்ளதாக அறிவித்தது. இந்த ஏவுகணை திட்டத்தால் தங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள் உடல்நலம் பாதிக்கப்படுவார்கள் என்று அந்த பகுதி கிராம மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டது. எனவே, இந்த திட்டத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்திக்க அந்நாட்டு பிரதமர் முடிவு செய்தார். இது குறித்து விளக்கம் அளிக்க அந்த பகுதிக்கு அந்நாட்டு பிரதமர் வாங் கியோ ஆன் சென்றார். பிரதமர் அந்த கிராம மக்களிடம் இது குறித்து விளக்கம் அளிக்க முயன்றார். அவரது விளக்க உரையை கேட்காமல் அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

அத்துடன், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பிரதமரின் வாகனத்தின் மீது முட்டைகளை வீசியும், தண்ணீர் பாட்டில்களை வீசியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் பாதுகாப்பிற்கு வந்த பொலிஸார் கூட்டத்தினரை கட்டுப்படுத்தி பிரதமரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top