நிலத்தடி குழாய் உடைந்தமையே
கொழும்பில் நீர் வெட்டுக்கு காரணம்

–  அமைச்சர் ரவூப் ஹக்கீம்

கொழும்பு, கொள்ளுப்பிட்டி, தெஹிவளை, கல்கிஸ்ஸை, பெலவத்தை, அம்பத்தன்ன போன்ற பிரதேசங்களில் நேற்று 6ஆம் திகதி தொடக்கம் நீர் வெட்டுக்கு காரணம் நிலத்தடி குழாய்கள் உடைந்துள்ளமையே என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய கட்டுப்பாட்டை மீறி நடைபெற்ற இந்த சம்பவத்தை அறியாத ஒரு சில அரசியல்வாதிகள் அறிக்கை விடுகிறார்கள் எனவே, அவர்கள் யாதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். நீர் வெட்டு இடம்பெற்றுள்ள இடங்களுக்கு முடியுமான அளவு பவ்ஸர் மூலம் நீர் விநியோகம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறனதொரு நிலை ஏற்பட்டமை தொடர்பில் பாவனையாளர்களுக்கு குறிப்பாக நோன்புப் பெருநாளை கொண்டாடும் கொழும்பு வாழ் மக்களுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தனது ஆழ்ந்த அனுதாபங்களை தொரிவித்துக் கொள்கின்றது.
இந்த குழாய் கசிவை தொடர்ந்து நேற்று முதல் இரவு பகலாக நீர் வழங்கல் வடிகாலைமப்பு சபையின் ஊழியர்கள், பொறியிலாளர்கள் 5 செயலணிகளாக களமிறங்கி மிக தீவிரமாக திருத்த வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கினறனர்.
சுமார் 20 அடி நிலத்திற்கு கீழ் இருக்கின்ற கல்வனைஸ் பைப் தொகுதி உடைந்துள்ளதாகவும் இது எந்ந இடத்தில் உடைந்துள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது. மிகப் பழைம வாய்நத குழாய்களின் போல்ட் நட்களை கலட்டுவதிலும் கஸ்டமான நிலைகாணப்படுவதாகவும் விடஙங்களை அவசராமாக முடிவுக்கு கொண்டுவருதற்கு ஏராளமான நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். முடியுமான அளவு இன்று (6) இந்த நிலையை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நிலத்துக்கடியில் இருக்கின்ற அம்பத்தன்னை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கொழும்பு ஊடாக செல்லும் கல்வனைஸ் குழைாயை முழுமையாக மாற்றீடு செய்ய வேண்டிய அவசியமும் இருக்கின்றது.
இவ்வாறான ஒரு தடை ஏற்பட்டது தவிர்க்க முடியாத ஒரு காரணமாகும்துரதிஸ்டம் எனவும் அமைச்சர் ஹக்கீம் மேலும்தெரிவித்துள்ளார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top