நபியின் அடக்கஸ்தலத்திலும் சரி நாம் விவாதத்துக்கு வர தயார்
- கலகொடஅத்தே ஞானசாரர்
தீவிரவாதிகளுடன் முஸ்லிம் கவுன்சிலுக்கு தொடர்பு
- டிலந்த
விதானகே
முஸ்லிம்களுக்கு
நாம் இஸ்லாம்
பாடம் தொடர்பில்
டியுசன் எடுக்கின்றோம்.
இன்று முஸ்லிம்களுக்கு
தீவிரவாதம் படித்துக் கொடுப்பதே நாட்டில் பிரச்சினையாகவுள்ளது
என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார
தேரர் தெரிவித்துள்ளார்.
கிருலப்பனையில்
நேற்று நடைபெற்ற
செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர்
மேலும் கூறுகையில்,
முஸ்லிம் தீவிரவாத
அமைப்புக்களுடன் நாம் நேரடியாக பேசத் தயார்.
தற்பொழுது நல்லதொரு
வாயில் திறபட்டுள்ளது.
எம்முடனான விவாத்தை
மக்காவிலோ மதீனாவிலோ
அல்லது முகம்மது
நபியின் அடக்கஸ்தலத்திலோ
வைக்க நாம்
தயார்
முஸ்லிம் சமூகத்தினால் பௌத்தர்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்கள் பற்றி யார் பேசுவது நாட்டை ஆட்சி செய்வோருக்கு இது பற்றி எவ்வித கவலையும் இல்லையா?நாட்டில் வீதிகளை அமைப்பதற்கு மட்டும் அரசாங்கங்கள் இல்லை.
எமது தலைவர்கள் வெளிநாடுகளை திருப்திப்படுத்த செயற்பட்டால் பௌத்தர்களுக்கு நன்மை ஏற்படாது.
சில வஹாப்வாத இளைஞர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு பேணுகின்றார்கள் என நாம் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே எச்சரித்தோம். ஆட்சியாளர்கள் இதனை இல்லை என்றார்கள். ஞானசார நோர்வே பணத்தைப் பெற்றுக் கொண்டு இவ்வாறு பொய்யுரைக்கின்றார் என குற்றம் சுமத்தினர். எனினும் இன்று உண்மை அம்பலமாகியுள்ளது.
இஸ்லாம் மதம் பற்றி டியூசன் சொல்லிக் கொடுக்க நாம் தயார். வீடு வீடாகச் சென்று முஸ்லிம் அமைப்புக்களை தோற்கடிக்க நாம் தயார்.பௌத்த மத போதனைகள் செய்யவும் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை எதிர்காலத்தில் ஏற்படக்கூடும்.
இதேவேளை,, இலங்கையில் செயற்படும் இஸ்லாமிய அமைப்பு ஒன்றுக்கும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் செயற்படும்,
முஸ்லிம் கவுன்சில்
ஒப் ஸ்ரீலங்கா
எனும் அமைப்பே
இவ்வாறு தீவிரவாதிகளுடன்
தொடர்பு கொண்டுள்ளதாக
அவர்
தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில கலந்துகொண்டு இதனைத் தெரிவித்துள்ளார்
இதன்
போது தொடர்ந்தும்
கருத்து தெரிவித்த
அவர், முஸ்லிம்
கவுன்சில் இஸ்லாமிய
தீவிரவாத அமைப்புக்களுடனும்,
அரபு நாடுகளுடன்
தொடர்புகளை பேணிவருகிறது.
அத்துடன்,
கலகொட அத்தே
ஞானசார தேரரை
கைது செய்ய
வேண்டும் என
அந்த அமைப்பு
பொலிஸ் மா
அதிபருக்கு முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளது.
ஞானசார
தேரர் கைது
செய்யப்படுவதையே அந்த அமைப்பு எதிர்பார்க்கின்றது. ஞானசார தேரர் கைது செய்யப்பட்டால்,
நாட்டின் பௌத்தர்கள்
பதற்றம் அடைவார்கள்.
அதன்
பின்னர் கலவரம்
எற்படும். இதுவே
அந்த அமைப்பின்
இலக்கு என
அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம்
கவுன்சிளுக்கு நாட்டின் நல்லிணக்கம் தொடர்பில் அக்கறை
இருக்குமாயின், அவர்கள் எம்முடன் கலந்துரையாடி இருக்க
வேண்டும் என
அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment