வங்கதேசத்தில்
நோன்பு பெருநாள் தொழுகை நேரத்தில்
பயங்கரவாதிகள் தாக்குதல்
வங்கதேசத்தில்,
ரமழான் நோன்பு பெருநாள் தொழுகை நேரத்தில்,
மக்கள் பெருமளவில்
கூடியிருந்த பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்,
மூன்று பேர்
பலியாயினர்; ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான்; மூன்று
பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
எமது அண்டை நாடான
வங்கதேசத்தின் தலைநகர் தாகாவில், கடந்த வாரம்,
ஒரு உணவு
விடுதியில் நுழைந்த, ஐ.எஸ்., பயங்கரவாதிகள்,
இந்தியப் பெண்
22 பேரை படுகொலை
செய்தனர். இந்த
சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், ,
ரமழான் பெருநாளையொட்டி
நடந்த சிறப்பு
தொழுகை கூட்டத்தில்,
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
வங்கதேசத்தில்
கிஷோர்கஞ்ச் மாவட்டத்தில், 2 லட்சம் பேர், சிறப்பு
தொழுகையில், பங்கேற்க கூடியிருந்தனர். அப்போது, பெரிய
கத்திகளுடன் வந்த சில பயங்கரவாதிகளை, பாதுகாப்புப்
படையினர் தடுத்து
நிறுத்தினர். இந்நிலையில், அங்கு ஒரு கையெறி
குண்டு வீசப்பட்டது.
இதில், ஒரு
போலீஸ்காரர் கொல்லப்பட்டார், 13 பேர் காயமடைந்தனர்.
அதைத்
தொடர்ந்து, பயங்கரவாதிகள் துப்பாக்கியால்
சுடத் தொடங்கினர்.
போலீஸார் நடத்திய எதிர்
தாக்குதலில், ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். இந்த
துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த ஒரு போலீஸ்காரர்,
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
அருகில்
உள்ள குடிசையில்
இருந்த ஒரு
ஹிந்து பெண்,
வெடித்துச் சிதறிய குண்டின் பாகங்கள் தெறித்ததில்
உயிரிழந்தார். பயங்கரவாதிகள் கத்தியால் வெட்டியதில் சிலர்
காயமடைந்தனர்.
இதையடுத்து,
மூன்று பயங்கரவாதிகளை
போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்தப் பகுதியில்
போலீஸ் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டது. ராணுவமும் வரவழைக்கப்பட்டது.இந்த தாக்குதலுக்கு
எந்த அமைப்பும்
பொறுப்பேற்கவில்லை. கடந்த வாரம், டாக்கா உணவகத்தில் நடத்திய
தாக்குதலைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் மேலும் பல
தாக்குதல்கள் நடத்தப்படும் என, ஐ.எஸ்.,
பயங்கரவாத அமைப்பு
எச்சரித்திருந்தது. 2 பயங்கரவாத தாக்குதல்களை
அடுத்து, வங்கதேசத்துக்கு
உதவுவதற்காக, என்.எஸ்.ஜி., எனப்படும்,
தேசிய பாதுகாப்புப்
படையைச் சேர்ந்த
சிறப்புக் குழு
அந்நாட்டுக்கு செல்கிறது.
உலகெங்கும் ரமழான்
நோன்பு பெருநாள்
கொண்டாடப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதத்தில்
மட்டும், பல்வேறு
நாடுகளில், குறிப்பாக முஸ்லிம்களை குறிவைத்து, நடந்த
பயங்கரவாத தாக்குதல்களில்,
ஆயிரம் பேர்
பலியாயினர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்த
மிகக் கொடூர
தாக்குதலில், 250 பேர் கொல்லப்பட்டனர். ஏமனில் இரு
தினங்களுக்கு முன் நடந்த தாக்குதலில், 10 பேர்
கொல்லப்பட்டனர்.
0 comments:
Post a Comment