வகவம் வருடாந்த கலை விழாவில்

கலைவாதி கலீல் கௌரவிப்பு

வகவம் வருடாந்த கலைவிழாவும், கௌரவிப்பும் சிறப்பு கவியரங்கும் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளவத்தையிலுள்ள தமிழ் சங்கத்தில் வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது இரண்டாண்டு கால வகவ நிகழ்வுகளின் சுவடுகள் அடங்கியவகவப் பதிவுகள்என்ற நூலும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், காவ்யபிமானி விருது பெற்ற நவமணி பத்திரிகையின் சிரேஷ்ட ஆசிரியர் பீட உறுப்பினரான கலைவாதி கலீல் பொன்னாடை போத்தி மாலை அணிவித்து பாராட்டி கௌரவிக்கப்படுவதையும்கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அனூஷா கோகுள பிரனாந்து விசேட அதிதியாக அழைக்கப்பட்டுஉரைநிகழ்த்துவதையும்,  “சிங்கள - தமிழ்க் கவிதைகள் உறவுகள்என்னும் தலைப்பில் மொழி பெயர்ப்பாளர் - சிங்கள - தமிழ் இலக்கிய செயற்பாட்டாளர் ஹேமச்சந்திரன பதிரன தமிழ் மொழியில் சிறப்புரையாற்றுவதையும் வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் தலைமையுரையாற்றுவதையும் வகவம் ஸ்தாபகத் தலைவர் டாக்டர் தாஸிம் அஹமது கௌரவிப்புஉரை நிகழ்த்துவதையும் காணலாம்.
மேலும் இந்நிகழ்வில்  “மானுடம் பாடும் கவிதைகள்எனும் கவிதைத் தொகுப்பிற்காக, அந்த கவிதைத் தொகுப்பாளர்களில் ஒருவரான மேமன் கவிக்கும் சின்னம் வழங்கி  பாராட்டி கௌரவிக்கப்படுவதையும் மேடையில் அதிதிகள் அமர்ந்திருப்பதையும் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
இதன் போது மேமன் கவியின் தலைமையில சிறப்பு கவியரங்கும் நடைபெற்றது.

-          Msm Zahir




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top